ஜூலை 18, புதுடெல்லி (New Delhi): பஜாஜ் (Bajaj) நிறுவனம் குறைந்த விலையில் எளிய மக்களுக்கான வாகனங்களை தயாரிக்கும் சிறந்த நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கின் பெயர் ஃப்ரீடம் (Freedom 125) ஆகும். இந்த பைக்கின் வடிவமைப்பை பொறுத்தவரை முன் பக்கம் ரக்கடான லுக் இருக்கிறது. இந்த பைக் ரூபாய் 95000 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. முதல் கட்டமாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. Care and Management of Dairy animals: கார்காலத்தில் கால்நடைகளுக்கும் கவனம் தேவை.. விபரம் உள்ளே..!
முதல் கஸ்டமர்: இந்த நிலையில் ஃப்ரீடம் 125 பைக்கிற்கான முன்பதிவுகள் இந்தியா முழுவதும் துவங்கப்படுவதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. மேலும், மஹராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இந்த பைக்கை புக் செய்தவர்களில் சிலருக்கு ஃப்ரீடம் 125 பைக்கை டெலிவிரி கொடுக்கும் பணிகளையும் பஜாஜ் துவங்கியுள்ளது. இதன்படி, முதல் ஃப்ரீடம் 125 பைக்கை புனேவை சேர்ந்த பிரவீன் தோரட் என்பவர் தனது குடும்பத்துடன் வந்து டெலிவிரி பெற்றுள்ளார்.