American Airlines Flight: ஓடுபாதையில் சக்கரங்களை இழந்த விமானம்; நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 176 பயணிகள்.!

176 பயணிகள் பயணம் செய்த விமானம், நல்வாய்ப்பாக ஓடுபாதையிலேயே சக்கரங்களை இழந்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

American Airlines Lost Tire on Runway (Photo Credit: @CollinRugg X)

ஜூலை 11, புளோரிடா (World News): அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம் (Florida), டாம்பா விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines) நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம் ஒன்று, 176 பயணிகள் மற்றும் விமான குழுவினருடன் புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் மேலெழும்ப தயாரான நிலையில், ஓடுதளத்தில் வேகமாக பயணிக்கும்போது திடீரென விமானத்தின் சக்கரங்கள் உடைந்துபோயின. இதனால் நிலைமையை உணர்ந்த விமானி, சற்றும் தாமதிக்காமல் விமானத்தை சுதாரிப்புடன் செயல்பட்டு பத்திரமாக நிறுத்தினார். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த விஷயம் குறித்து விமானத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். PM Modi Austria Visit: 2047க்குள் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் இடம்பெற்றுள்ள இந்தியா - ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி பெருமிதம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)