Car Crash In Hospital: மருத்துவமனை வளாகத்தில் தறிகெட்டு இயங்கி விபத்திற்குள்ளான கார்; 10 பேர் படுகாயம்.!

வாகனங்களின் இயக்கம் அதிவேகம் என்ற நிலையில் இருந்தால் அது கட்டாயம் ஆபத்தில் தான் முடியும் என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் நடந்தேறி இருக்கின்றன. மருத்துவமனைக்கு உடல்நலம் சரியில்லாதவருடன் வந்தவர்கள், அதே மருத்துவமனையில் விபத்தில் சிக்கி சிகிச்சைபெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Car Crash In Hospital: மருத்துவமனை வளாகத்தில் தறிகெட்டு இயங்கி விபத்திற்குள்ளான கார்; 10 பேர் படுகாயம்.!
Hospital Car Crash in Austin (Photo Credit: @BNONews X)

பிப்ரவரி 14, டெக்ஸாஸ் (World News): அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணம், ஆஸ்டின் நகரில் செயின்ட் டேவிட் வடக்கு ஆஸ்டின் மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று நோயாளிகளுடன் (Car Crash in Texas) வந்திருந்தவர்கள், அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் அமர்ந்து இருந்தனர். அச்சமயம், திடீரென தறிகெட்டு இயங்கிய கார் ஒன்று, கதவை தாண்டி உள்ளே வந்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனையில் நடந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆஸ்டின் காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் காயமடைந்தோர் அனைவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். International Condom Day 2024: சர்வதேச ஆணுறை தினம் இன்று; ஆணுறை பயன்படுத்தவேண்டியதன் அவசியம், நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement