IND Vs NZ 2nd Test: இந்தியா வெற்றிக்கு 359 ரன்கள் இலக்கு.. ஜெய்ஸ்வால்-கில் அதிரடி ஆட்டம்..!

இந்தியா-நியூசிலாந்து 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற 359 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IND Vs NZ 2nd Test Day 3, Lunch Break (Photo Credit: @ddsportschannel X)

அக்டோபர் 26, புனே (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து (IND Vs NZ 2nd Test, Day 3) அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் (Pune) நேற்று முன்தினம் (அக்டோபர் 24) தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 156 ரன்களுக்கு சுருண்டது. IND Vs NZ 2nd Test: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவு; நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை..!

இதன்பின்னர், 2வது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி நிதானமாக விளையாடி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 53 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 301 ரன்கள் முன்னிலை வகித்தது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 26) 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். கிளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 48 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க, நியூசிலாந்து அணி 69.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 255 எடுத்தது.

359 ரன்கள் இலக்கு:

இதன் மூலம், இந்திய அணிக்கு 359 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 3 விக்கெட்டையும், வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) 4 விக்கெட்டையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் ரோஹித் சர்மா (Rohit Sharma) 8 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) மற்றும் கில் (Shubman Gill) கூட்டணி இணைந்து மதிய உணவு இடைவேளை வரை அதிரடியாக விளையாடி 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தனர். இன்னும் வெற்றி பெற 278 ரன்கள் தேவைப்படுகிறது.

ஜெய்ஸ்வால் அதிரடி: