Asia Cup 2023: ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023-ல் களமிறங்கும் இந்திய சிங்கங்களின் லிஸ்டை வெளியிட்டது பிசிசிஐ.! விபரம் உள்ளே.!
4 செப்டம்பரில் நேபாள அணியை எதிர்கொள்கிறது. பின் தகுதிச்சுற்றை முடிக்கும் அணிகள் அடுத்தடுத்து மோதிக்கொள்கின்றன.
ஆகஸ்ட் 21, புதுடெல்லி (Cricket News): ஆசியாவில் உள்ள இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 (Asia Cricekt Cup 2023) போட்டித்தொடர் 31 ஆகஸ்ட் 2023 அன்று தொடங்குகிறது. இந்த போட்டி இலங்கை (SriLanka) மற்றும் பாகிஸ்தான் (Pakistan) நாடுகளில் உள்ள மைதானங்களில் வைத்து நடைபெறுகின்றது.
13 ஒருநாள் கிரிக்கெட் (One Day Innings) போட்டிகளில் இந்தியா 2 செப்டம்பர் அன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 4 செப்டம்பரில் நேபாள அணியை எதிர்கொள்கிறது. பின் தகுதிச்சுற்றை முடிக்கும் அணிகள் அடுத்தடுத்து மோதிக்கொள்கின்றன. இதனால் ஆட்டம் எப்போதும் பரபரப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Trending Video: வானெங்கும் ஒளிர்ந்த மின்னல் கீற்றுகள்; எரிமலைக்குள் இருந்து தலைகீழாக பாய்ந்த பகீர் காட்சிகள்.!
இந்த போட்டியை Star Sports தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். இந்திய Hotstar பயனர்கள் நேரலையை இலவசமாகவும் காணலாம். போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023-ஐ எதிர்கொள்கிறது.
அணியின் வீரர்கள்: ரோஹித் சர்மா (Rohit Sharma), சுப்னம் ஹில், விராட் கோலி, ஸ்ரேயா ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல் ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்த்துல் தாகூர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்டிஸ் பும்ரா, முகமது ஷமி (Mohd Shami), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
காத்திருப்பு பட்டியல்: சஞ்சு சாம்சன் (Sanju Samson).