BCCI Warning: "தனிப்பட்ட தகவலை பொதுவெளியில் பகிர வேண்டாம்" - விராட் கோலியின் செயலால் உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ.!
ஆசிய கிரிக்கெட் போட்டி தொடருக்கான பயிற்சி பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில் விராட் கோலி தனது யோயோ டெஸ்ட் ஸ்கோரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருப்பது பிசிசிஐ நிர்வாகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகஸ்ட் 25, பெங்களூரு (Sports News): ஆசிய கோப்பையில் விளையாடப் போகும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ (BCCI) நிர்வாகம் இன்று வெளியிட்டது. 50 ஓவர் முறையில் நடக்கப்படும் இந்தத் தொடர் உலகக் கோப்பைக்கு முன்பாக வீரர்களுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடருக்கான பயிற்சி தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீரர்களின் உடல் வலிமையை நிர்ணயிக்கும் யோயோ டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டது. இந்த டெஸ்ட் முடிவடைந்தவுடன் விராட் கோலி (Virat Kohli) தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தான் 17.5 ஸ்கோரை பெற்று யோயோ டெஸ்டில் (YoYo Test) தேர்ச்சிபெற்றதாகப் பகிர்ந்திருந்தார். Anouncement of National Award: தேசிய விருதை பெறப்போகும் தமிழ் படம் எது தெரியுமா? பலரும் எதிர்பார்க்காத எதார்த்தமான திரைப்படம்.!
ஆனால் பிசிசிஐ நிர்வாகம், வீரர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச ஸ்கோர் 16.5 தான் என்று கூறப்படுகிறது. கோலியின் இந்தப் பதிவுக்கு பிசிசிஐ நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் விராட் கோலிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
வீரர்கள் தங்கள் டெஸ்ட் மதிப்பெண்களையும் பிசிசிஐ தொடர்பான ரகசிய விவரங்களையும் சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது என்று ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட்டிருப்பதாகவும் பிசிசிஐ நிர்வாகம் கண்டித்துள்ளது. இருப்பினும் வீரர்கள் தங்கள் பயிற்சியின் போது எடுக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.