நவம்பர் 21, தலைமை செயலகம் (Chennai News): கூட்டுறவு இயக்கத்திற்கு வேர்கள் போன்று ஆதாரமாக இருக்கும் அனைத்து கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன் பேணும் வகையில் உறுப்பினர் நலநிதி உருவாக்கப்பட்டு "வேர்கள்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நலன் காக்கும் வகையில் மருத்துவம், கல்வி, திருமண நிதியுதவி பெற்றுக் கொள்ளலாம். புதிய கூட்டுறவு சங்க உறுப்பினராக விரும்பினால் அருகில் உள்ள கூட்டுறவு அலுவலகத்துக்கு சென்று விண்ணப்ப படிவம் வாங்கி சேர்ந்து கொள்ளவும்.
வேர்கள் திட்டத்தில் எப்படி சேர்வது? : எல்லா கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்களும் தனி நபர் உறுப்பினர் 100 ரூபாய் மாத சந்தா செலுத்தி சேரலாம். கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலக வலைத்தளம் பக்கத்தில் மொபைல் எண் உள்ளிட்டால், மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதனை மீண்டும் உள்ளிட்டு லாகின் செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு உங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞரா நீங்கள்? தமிழ்நாடு அரசின் அசத்தல் கண்காட்சி.. கலந்துக்கோங்க., பரிசை வெல்லுங்க.!
வேர்கள் திட்டத்தின் பயன்கள் :
- உறுப்பினர் இயற்கை மரணம் எய்தினால் ரூ. 50,000
- விபத்து மரணம் அடைந்தால் ரூ. 1,00,000
- முழு உடல்ஊனம் அடைந்தால் ரூ. 50,000
- இரு குழந்தைகளின் கல்விச் செலவு தலா ரூ. 10,000
- பகுதி உடல் ஊனம் அடைந்தால் ரூ. 25,000
- இரு பெண் குழந்தைகளின் திருமணச் செலவு தலா ரூ. 10,000
- உறுப்பினர் எந்த நிதி பயனும் பெறாதவராக இருந்தால் செலுத்திய சந்தா தொகைக்கு ஏற்ப ரூ. 7500 முதல் ரூ. 1 லட்சம் வரை நிதி பயன் பெறலாம்.
எவ்வாறு நிதி உதவி பெறுவது? : உறுப்பினர் / உறுப்பினரின் நாமினி, மரணம் / விபத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் RCS Portal வழியாக லாகின் செய்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபியை உள்ளிட்டு விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். உங்களின் விண்ணப்பம் RCS Portal வாயிலாக சங்க நிர்வாகத்தால் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு சரக துணைப்பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும். பதிவாளர் தலைமையிலான மாநிலக் குழு நிதியுதவிக்கு பரிந்துரைத்து வழங்கும்.
வேர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர் நலநிதி:
வேர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர் நலநிதி @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @mp_saminathan @OfficeOfKRP #TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/7eprjyMnfX
— TN DIPR (@TNDIPRNEWS) November 20, 2024