நவம்பர் 21, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் (Bagalkot) உள்ள இலகல் கிராமத்தை சேர்ந்தவர் பாபன்னா யார்னால். இவரது மனைவி பசவராஜேஸ்வரி யார்னால். பாபன்னா யார்னால் ராணுவ வீரராக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியபோது மின்சாரம் தாக்கி கடந்த 2017-ஆம் ஆண்டு வீர மரணமடைந்தார். தற்போது, பசவராஜேஸ்வரி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சசிகலா ஆன்லைனில் ஹேர் டிரையர் (Hair Dryer) ஆர்டர் செய்துள்ளார். College Girl Gang Rape: காதலனை நம்பி ஏமாந்த மாணவி.. கூட்டு பலாத்காரம் செய்த நண்பர்கள்.., 4 பேர் அதிரடி கைது..!
இதனையடுத்து, அந்த ஹேர் டிரையர் டிடிடிசி கொரியர் மூலம் நவம்பர் 15-ஆம் தேதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பார்சலை கொண்டு வந்தவர் சசிகலாவுக்கு போன் செய்து பேசினார். அப்போது சசிகலா, நான் வெளியூர் வந்து விட்டேன், ஹேர் டிரையரை பக்கத்து வீட்டில் உள்ள பசவராஜேஸ்வரியிடம் கொடுங்கள் என கூறியுள்ளார். மேலும் சசிகலா, பசவராஜேஸ்வரிக்கு போன் செய்து ஹேர் டிரையரை வாங்கி வைக்கும்படி கூறினார். இதனால், பசவராஜேஸ்வரி ஹேர்டிரையரை வாங்கி தனது வீட்டில் பரிசோதிக்க முயன்றார். ஹேர் டிரையரை அவர் ஆன் செய்து பரிசோதிக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக ஹேர் டிரையர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர்.
அப்போது, அவரது கை மற்றும் விரல்களில் படுகாயம் ஏற்பட்டு இருந்தது. அவர் வலியால் அலறியடித்தார். இதனையடுத்து, உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அவரது ஒரு கை செயலிழந்தது. இதனால் கை துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹேர் டிரையர் வெடித்ததில் அவரது இரு கைகளில் உள்ள விரல்களும் துண்டிக்கப்பட்டன. தற்போது, அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.