நவம்பர் 16, சென்னை (Chennai News): தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) கடந்த ஜுன் மாதம் முதல் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சி.என்.ஜி (CNG), எல்.என்.ஜி (LNG) மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 7 போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்துகள் வீதம் 14 பேருந்துகள் சிஎன்ஜி மூலம் இயக்கப்படுகின்றன. வானிலை: இன்று மதியம் 1 மணிவரை 21 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் (SETC) சார்பாக தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளில் முதல் முறையாக, டீசல் எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த சிஎன்ஜி பயன்படுத்தி, மறுசீரமைப்பு செய்த பேருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்து திருச்சி-சென்னை (Trichy To Chennai) வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கோவை, திருநெல்வேலி, விழுப்புரம் போக்குவரத்து கழகங்களிலும் சோதனை அடிப்படையில் சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)