Chicken Egg Poriyal (Photo Credit: YouTube)

நவம்பர் 21, சென்னை (Kitchen Tips): நாம் தினமும் முட்டையை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். முட்டையை நாம் நமது உணவில் பலவாறு சாப்பிடலாம். அதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது முட்டை பொரியலை தான். ஆனால், முட்டைப் பொரியலை இன்னும் சுவையாக சமைத்து சாப்பிட விரும்பினால், இதனுடன் புரோட்டீன் அதிகம் நிறைந்த சிக்கனையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சிக்கன் முட்டை பொரியல் (Chicken Egg Poriyal) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Idli Maavu Kara Bonda Recipe: இட்லி மாவு வைத்து சுடச்சுட கார போண்டா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 1

குடைமிளகாய் - கால் கப்

பச்சை மிளகாய் - 2

முட்டை - 2

சிக்கன் - 100 கிராம்

மிளகுத் தூள் - தேவையான அளவு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனை குக்கரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்பு வேக வைத்த சிக்கனை கையால் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில், எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
  • பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாயை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
  • அடுத்து அதில் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளற வேண்டும். இறுதியாக சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சிக்கன் முட்டை பொரியல் ரெடி.