நவம்பர் 21, சென்னை (Chennai News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராபின் டென்னிஸ் (வயது 40). இவரின் மகள் எலினா லார்ட் (வயது 15). அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த சிறுமி, கூடைப்பந்து வீராங்கனை என்பதால், சமீபத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியரில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள சென்றுள்ளார். போட்டி நிறைவுபெற்று க்ராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸில் சென்னை நோக்கி பயணித்தபோது, நவம்பர் 16, 2024 அன்று சிக்கன் ரைஸ், பர்கர் போன்றவற்றை வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். அதனை சாப்பிட்ட சிலமணிநேரத்தில் மாணவிக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வழியியலே அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி:
ஆனால், சிறுமி சாதாரண வயிற்று வலி என புறப்பட்டுள்ளார். சென்னை அண்ணா நகரில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின் பேரவள்ளூரில் இருக்கும் உறவினரின் வீட்டில் தங்கச் சென்றுள்ளார். அப்போது மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக சிகிச்சைக்காக அனுமதி செய்ய்யப்ட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. Dindigul Accident: லாரி - இருசக்கர வாகனம் மோதி சோகம்., 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி.!
சிக்கன் ரைஸ் காரணமா?
மேலும், இரயிலில் வழங்கப்பட்ட சிக்கன் ரைஸ் சப்பிட்டே அவர் உயிரிழந்தார் என தகவல் வெளியானது. காவல் துறையினர் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்த நிலையில், அதில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது, மாணவி சாப்பிட்ட சிக்கன் ரைஸுக்கும் - மரணத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் டயபிராம் எனப்படும் நுரையீரலுக்கு அடியில் இருக்கும் தசை கிழித்து மரணடைந்தது உறுதியானது.
மருத்துவ நிலை காரணம்:
டயாபார்ம் குறித்தும், அதன் கிழிவுக்கான காரணம் குறித்தும் மருத்துவர்கள் தெரிவிக்கையில், "நுரையீரலுக்கு கீழே இருக்கும் அடுக்கும் டயாபார்ம் (Diaphragm) என அழைக்கப்படும். காற்றை இழுத்து வெளியிடும்போது இது சுருங்கி விரியும். இது பாதிக்கப்பட்டால் பக்கவிளைவு ஏற்படும். இதற்கு முக்கிய காரணமாக எதிர்பாராத விதமாக அடிபடும் பட்சத்தில் டயாபார்ம் பாதிக்கப்படும். தொடக்கத்தில் நமக்கு ஏதும் தெரியாது எனினும், செல்லச்செல்ல நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் போன்றவை இருக்கும். இதனால் சாதாரணமாக இது இருக்கலாம் என மக்கள் அலட்சியமாக இருக்கலாம். ஆனால், உள்ளுக்குள் அவை கிழியத்தொடங்கும். School Teacher Killed: அரசுப்பள்ளியில் ஆசிரியை கொலை., முதல்வர் இரங்கல் & ரூ.5 இலட்சம் நிதிஉதவி அறிவிப்பு.!
24 மணிநேரத்திற்குள் சிகிச்சை பெற்றால் பிரச்சனை இல்லை:
டயாபார்ம் ஓட்டை விழுவதால், அவை உள்ளுக்குள் வெளியே வந்து பக்கவிளைவு ஏற்படும். இதனால் நுரையீரல், கல்லீரலை அழுத்தும். இதயத்தை அழுத்தினால் இதயம் சுருங்கி விரிதல் குறையும். இதனால் இரத்த ஓட்டம் தடைபடும், சிலருக்கு உயிரிழப்பு ஏற்படும். டயாபார்ம் ஏற்பட்டு 24 மணிநேரத்திற்குள் சிகிச்சை பெற்றால் எந்த பிரச்சனையும் இல்லை, சரி செய்துவிடலாம். விளையாட்டு வீரர்களுக்கு பெரும்பாலும் இவ்வாறான பிரச்சனை ஏற்படும். ஏனெனில் திடீரென கீழே விழுவதால் நுரையீரலில் டயாபார்ம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பாதிப்புக்கு வயது வித்தியாசம் இல்லை.
அலட்சியம் வேண்டாம்:
விளையாட்டு வீரர்கள் மார்பு, வயிறு பகுதியில் அடிபட்டால், 6 மணிநேரம் வரை அவை தொடர்ந்தால், கட்டாயம் அவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. முதல் 24 மணிநேரத்திற்குள் மருத்துவரை நாடிவிட்டால், உயிர் காப்பாற்றப்படும் வாய்ப்புகள் அதிகம். நேரம் செல்லச் செல்ல உயிர் காப்பாற்றப்படும் வாய்ப்புகள் குறைந்துவிடும். இவ்வாறான பிரச்சனைகளை நெஞ்சு எரிச்சல், வயிறு வலி என அலட்சியமாக இருப்பதே, உயிர்பலிக்கு காரணமாக அமைகிறது. விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாது, இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் போன்றவற்றில் செல்வோர், எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விபத்தில் சிக்கினாலும், உடல் சோதனை செய்வது நல்லது" என கூறினர்.