ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது? - ஐசிசி-யிடம் பிசிசிஐ கோரிக்கை.!
தொடர்ந்து வரும் பயங்கரவாத தாக்குதலை கருத்தில் கொண்டு, இந்திய அணியின் பாதுகாப்பு மற்றும் இந்திய ரசிகர்களின் பாதுகாப்பை கருதி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியை வேறு நாட்டில் நடத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11, புதுடெல்லி (Sports News): ஐசிசி கிரிக்கெட் நிர்வாகம் நடத்தும் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி (ICC Champions Trophy) விளையாட்டு போட்டியை, 2025ம் ஆண்டில் பாகிஸ்தான் நாடு தலைமையேற்று நடத்துகிறது. 8 கிரிக்கெட் அணிகள் கலந்துகொள்ளும் போட்டியில் 15 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 50 ஓவர்கள் முறையில் நடைபெறும் இந்த ஆட்டம், 19 பிப்ரவரி 2025ல் தொடங்கி 9 மார்ச் வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. PM Modi Austria Visit: 2047க்குள் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் இடம்பெற்றுள்ள இந்தியா - ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி பெருமிதம்.!
தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள்:
கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய இடங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் இந்த ஆட்டங்கள் நடக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சென்று விளையாட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. அதேபோல, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் ஊடுருவல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
பிசிசிஐ கோரிக்கை:
இதனை கருத்தில்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு பிசிசிஐ நிர்வாகம் அனுப்பி வைக்கவும் தயங்குகிறது. இதனால் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்காக, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டுக்கு செல்ல வாய்ப்பில்லை என்பதால், இலங்கை அல்லது துபாய் நாடுகளில் போட்டியை நடத்த ஐசிசி நிர்வாகத்திடம் பிசிசிஐ தரப்பு கோரிக்கை வைத்துள்ளதாக ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.