BCCI Annual Contracts: ரஞ்சி ஆடு.. இல்லையேல் ஓடு.. வீரர்களை விரட்டி அடிக்கும் பிசிசிஐ..!

கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் இருந்து 9 நட்சத்திர வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

Shreyas Iyer and Ishan Kishan (Photo Credit: @toisports X)

பிப்ரவரி 29, புதுடெல்லி (Sports News): பிசிசிஐ புதிய மத்திய ஒப்பந்தத்தை நேற்று வெளியிட்டு இருந்தது. அதன்படி மத்திய ஒப்பந்தத்தில் இணையும் வீரர்களுக்கு பிசிசிஐ ஆண்டுதோறும் நிலையான சம்பளத்தை வழங்குகிறது. இது தவிர போட்டிக்கு ஏற்ப கட்டணம் பெறுகின்றனர். அதன்படி, கிரேட் ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெறும் இந்திய வீரர்களுக்கு ரூ.7 கோடி ஊதியமும், ஏ பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊதியமும், பி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊதியமும், சி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.1 கோடி ஊதியமும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாத வீரர்களுக்கு போட்டி கட்டணம் மட்டுமே வழங்கப்படும். Skoda Electric SUV: மிகக்குறைவான விலையில் வெளியாக உள்ள எலக்ட்ரிக் கார்... ஸ்கோடா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!

இந்தப் பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் (Shreyas Iyer and Ishan Kishan) உட்பட 9 நட்சத்திர வீரர்கள் இடம்பெறவில்லை. அதாவது ரஞ்சிப் போட்டியில் (Ranji Trophy) விளையாடாமல் இருந்த ஸ்ரேயாஸ் மற்றும் இசான் கிஷன் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் அஜிங்க்யா ரஹானே, சேதேஷ்வர் புஜாரா, உமேஷ் யாதவ், ஷிகர் தவான், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர் ஆகியோர் குழுவின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தற்போது பிசிசிஐயின் இந்த நடவடிக்கையானது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தப் பட்டியலில் இருந்து இந்திய அணியில் இடம்பெறாதபோது இந்திய அளவிலான உள்ளூர் போட்டிகளில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.