IND Vs NZ: வெற்றிக்கோப்பையுடன் தோனி.. 12 ஆண்டுகளுக்கு முன் நடந்த சுவாரசியம்.. மறக்க முடியுமா?..

ஆனால், இன்று சொந்த மண்ணில் இந்திய அணி நியூசிலாந்தை டெஸ்ட் போட்டியில் எதிர்கொண்டு படுதோல்வி அடைந்துள்ளது.

Team NZ Tour India 2024 | MS Dhoni (Photo Credit: @ANI / Facebook)

அக்டோபர் 27, சென்னை (Cricket News): இந்தியாவில் சுற்றுப்பயணம் (New Zealand India Tour) மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணிக்கு எதிராக முதலில் 3 டெஸ்ட் தொடர்களில் விளையாட திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் டெஸ்ட் தொடர் பெங்களூரில் உள்ள மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் தொடர் புனேவில் உள்ள மைதானத்திலும் வைத்து விறுவிறுப்புடன் நடைபெற்றது. இந்த இரண்டு போட்டியிலும், இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இரண்டு போட்டியிலும் இந்தியா தோல்வி:

முதல் போட்டியில் இந்திய அணி 46 & 462 என இரண்டு இன்னிங்சில் ரன்கள் சேர்த்தாலும், நியூசிலாந்து அணி 402 & 110 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. இந்திய அணி முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்கிஸிலும் 10 விக்கெட்டையும் தவறவிட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 156 & 245 ரன்கள் எடுத்திருந்தது. மறுமுனையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 259 & 255 ரன்கள் குவித்து வெற்றி அடைந்தது. 3 போட்டிகளில் அடுத்தடுத்து 2 போட்டியிலும் வெற்றி அடைந்த நியூசிலாந்து அணி, இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் கோப்பையை 12 ஆண்டுகளுக்கு பின்பு தனதாக்கியது. எஞ்சிய இறுதி மற்றும் மூன்றாவது டெஸ்ட் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் நவ.1 அன்று தொடங்கி நடைபெறுகிறது. IND Vs NZ 2nd Test: முடிவுக்கு வந்த 12 வருட சாதனை.. இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தல்.., நியூசிலாந்து அபார வெற்றி..!

12 ஆண்டுகளுக்கு முன்பு நம்வசம் முடிவு:

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி எம்.எஸ் தோனி தலைமையில் இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டது. இந்திய அணி 2 போட்டிகளில் அபார வெற்றி அடைந்து, தோனி வெற்றிக்கோப்பையை ஏந்தி இருந்தார். இன்று 12 ஆண்டுகள் கழித்து நியூசிலாந்து இந்திய மண்ணில் சாதனை புரிந்துள்ளது. அன்று தோனியின் தலைமையிலான அணி திறம்பட தனது பங்களிப்பை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தபோது, வெற்றி போராடி கிடைத்திருந்தது.

வீழ்ந்தாலும் போராடி வெற்றி:

முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வீரர் சச்சின் தெண்டுல்கர் 160 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி அடைந்தது. இரண்டாவது டெஸ்டில் தோனி ஆடவும் இல்லை, கேப்டனாகவும் இல்லை. சேவாக் தலைமையில் அணி களமிறங்கியது. ஜெஸ்லி ரைடரின் இரட்டை சத்தத்தால் முதல் இன்னிங்சில் மட்டுமே நியூசிலாந்து 600+ ரன்களை குவித்தது. முதல் இன்னிங்சில் இந்தியா சொதப்பியது.

தோனி கையில் கோப்பை:

காம்பீர் இரண்டரை நாள் முழுவதும் ஆட்டத்தை தாக்குபிடிக்க, லட்சுமணன் மற்றும் யுவராஜின் ஒத்துழைப்பால் இறுதியில் சமனில் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. பின் மூன்றாவது போட்டிக்கு மீண்டும் தோனி கேப்டனாக தலைமைப் பொறுப்பேற்க, கம்பீர் தனது அசத்தல் பங்கை வெளிப்படுத்தி சதம் அடிக்க, இந்தியா வெற்றிக்கனியை எட்டியது. நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின்போது, அந்த அணி 8 விக்கெட்டை இழந்தது. ஆட்டம் 1 மணிநேரத்தில் முடியும் தருவாயில், மழை குறுக்கிட்டு, ஆட்டம் சமனில் முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் தொடரை இந்தியா கைப்பற்றி, கோப்பை இந்திய அணியின் கையில் வைத்தது. கேப்டனாக தோனி தனது கையில் கோப்பையை ஏந்தினார்.

அன்று சேவாக் சொதப்பினாலும், கம்பீர் கோடிக்கணக்கான இதயங்களை வென்று இருந்தார். சாம்சன், ட்ராவிட், லட்சுமண், யுவராஜ், ஜாகிர் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தனர். பந்துவீச்சில் ஹர்பஜன், ஜாகிர், இஷாந்த், முனாப் அசத்தி இருந்தனர்.