Former Sri Lanka Cricketer Lahiru Thirimanne Hospitalized: விபத்தில் சிக்கிய முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே... ரசிகர்கள் சோகம்..!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே கார் விபத்துக்குள்ளானதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Lahiru Thirimanne (Photo Credit: @Sportskeeda X)

மார்ச் 14, அனுராதபுரம் (Sports News): 34 வயதாகும் லஹிரு திரிமான்னே (Lahiru Thirimanne) 44 டெஸ்ட்களில் 2088 ரன்களும், 127 ஒருநாள் போட்டிகளில் 3,194 ரன்களும், 26 டி20 போட்டிகளில் விளையாடி 291 ரன்களும் குவித்துள்ளார். கடந்த் 2010ஆம் ஆண்டு மிர்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் (Sri Lanka Cricketer) அறிமுகமான திரிமான்னே தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அவர் 2013 இல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

அதன்பின் கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை அணி ஆசிய கோப்பையை வென்ற போது அந்த தொடரில் இரண்டு சதங்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியிலும் அங்கம் வகித்தார். இவர் இலங்கை அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தார். Samsung Galaxy Ring: "ஸ்மார்ட் வாட்ச்-க்கு விடுதலை" - புதிய பரிணாமத்துடன் களமிறங்கும் சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் ரிங்.. அசத்தல் விபரம் இதோ.!

விபத்தில் சிக்கிய லஹிரு திரிமான்னே: இந்நிலையில் திரிமான்னே தனது குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​நகரின் திராபன்னே பகுதியில் அவரது கார் லாரி மீது மோதியது (Horrific road accident). இதில் அவரது காரி முன்பக்கம் முற்றிலும் சிதைந்தது. விபத்தைத் தொடர்ந்து, திரிமான்னே உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் திரிமான்னேவுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.