ICC T20 IND Vs PAK Match Weather Prediction: ஐசிசி டி20 போட்டியில் மோதிக்கொள்ளும் இந்தியா - பாகிஸ்தான்; வானிலை நிலவரம் எப்படி?.. விபரம் உள்ளே.!

ஜூன் 09ம் தேதி ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தின் போது அமெரிக்காவில் வானிலை குறுக்கிடுமா? என்ற எண்ணம் தற்போது மேலோங்கி இருக்கிறது. அதற்கான சாதக நிலைகள் குறித்து லேட்டஸ்ட்லி செய்தியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Nassau County International Cricket Stadium (Photo Credit: @ArfaSays_ X)

மே 29, நியூயார்க் (Cricket News): ஐசிசி ஆடவருக்கான டி20 உலகக்கோப்பை போட்டி 2024 (ICC Men's T20 World Cup 2024), ஜூன் மாதம் 01ம் தேதி முதல் தொடங்கி 29ம் தேதி வரை அமெரிக்காவில் விறுவிறுப்புடன் நடைபெறவுள்ளது. ஜூன் 01ம் தேதி டல்லஸில் உள்ள மைதானத்தில் கனடா - அமெரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் ஆட்டத்துடன் ஐசிசி டி20 தொடர் தொடங்குகிறது. இறுதிப்போட்டி ஜூன் 29ம் தேதி பார்படோஸ் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்: இவற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆட்டம், ஜூன் மாதம் 09ம் தேதி நியூயார்க்கில் உள்ள நாஸவ் (Nassau County International Cricket Stadium) கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் என்பது இருநாட்டிலும் பெரும் உணர்வகிப்போனதால், இன்றளவும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் போரை விட வலுவான விஷயமாக கவனிக்கப்படுகிறது. Realme Narzo N65 5G: ரியல்மி நார்சோ N65 5ஜி ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம்..! அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் உள்ளே..!

வானிலை நிலவரம் என்ன? அந்த வகையில், தற்போது நடைபெறவுள்ள ஐசிசி டி20 போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மழை தடையை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தற்போது அமெரிக்காவில் பருவகாலம் காரணமாக பல சூறாவளி புயல்கள் காரணமாக மழை பல மாகாணங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. பிளாக்பஸ்டர் ஆட்டமாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் 4 டிராப் இன் களங்கள் உள்ளன.

ரசிகர்களுக்கு நல்ல செய்தி: இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டி20 2024 போட்டியில், ஜூன் 05ம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. ஒருநாள் இடைவெளியில் பாகிஸ்தான் அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. ஜூன் 09ல் நாம் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் இரவு 09:00 மணியளவில் நடைபெறுகிறது. இந்த நாளில் மழைக்கான முன்னறிவிப்பை பொறுத்தமட்டில், வானிலை அறிவிப்பின்படி மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலை என்பது 25 டிகிரி செல்ஸியஸ் அளவில் இருக்கும். நல்ல காற்றுடன் வானிலை நிலவும். இதனால் முதல் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை காண ஆவலுடன் உங்களுடன் நாங்களும்..

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now