T20 WORLD CUP 2024: ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை: சொந்த மண்ணில் அமெரிக்க கிரிக்கெட் அணி தனது முதல் வெற்றியை உறுதி செய்தது..!

மிகப்பிரம்மாண்டமான முறையில் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 கிரிக்கெட் போட்டியில், முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணி வெற்றி அடைந்தது.

ICC T20 WC 2024 CAN Vs USA (Photo Credit: @ICC X)

ஜூன் 02, டல்லஸ் (Cricket News): ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை (T20 WORLD CUP 2024) அமெரிக்காவில் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கி இருக்கிறது. இன்று நடைபெற்ற முதல் ஆட்டம், இந்திய நேரப்படி காலை 6 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்டிங் செய்த கனடா அணியின் சார்பில் விளையாடியவர்கள், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தனர். இவர்களில் ஆரோன் ஜான்சன் 16 பந்துகளில் 23 ரன்னும், நவநீத் 44 பந்துகளில் 61 ரன்னும், நிக்கோலஸ் 31 பந்துகளில் 51 ரன்னும், ஸ்ரேயா 16 பந்துகளில் 32 ரன் எடுத்து அசத்தியிருந்தனர். இதனையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணி களம் இறங்கியது. Norway Chess 2024: செஸ் போட்டியில் புதிய சரித்திர சாதனை; நம்பர் 1ஐ தொடர்ந்து நம்பர் 2-வையும் தோற்கடித்த பிரக்யானந்தா.! 

இரண்டாவதாக களமிறங்கிய அமெரிக்கா அசத்தல் வெற்றி: அமெரிக்காவின் தொடக்கட்டக்காரரான ஸ்டீவன் டைலர் இரண்டு பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காமல் விக்கெட்டை இழந்தார். இதனால் அணியினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். அமெரிக்கா அணியின் சார்பில் விளையாடியவர்களில் ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 94 ரன்கள் அடித்து அசத்து இருந்தார். ஆண்ட்ரியாஸ் 46 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்தார். இதனை எடுத்து 17.4 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டை இழந்த அமெரிக்க அணி, 197 ரன்கள் எடுத்தது. முதல் போட்டியில் வெற்றியைக் கண்ட அமெரிக்க அணி, அடுத்தடுத்த போட்டிகளுக்காக தயாராகி வருகிறது. இன்று இரவு 8 மணியளவில் மேற்கிந்திய தீவுகள் வெர்சஸ் பப்புவா நியூ கினியா அணிகள் இடையே போட்டி நடைபெறுகிறது. நாளை காலை 6 மணியளவில் நமீபியா - ஓமன் அணிகள் இடையே போட்டி நடைபெறுகிறது.