Aircraft Message as Release Imran Khan: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியில் கவனத்தை ஈர்த்த இம்ரான் கான் ஆதரவாளர்கள்; நடுவானில் உயரப்பறந்த கோரிக்கை.!

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்ற மைதான பகுதியில், இம்ரான் கானை விடுதலை செய்யக்கூறி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பான போஸ்டர் குறித்த தகவல் பார்வையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

IND Vs PAK Match Imran Khan Release Message (Photo Credit: @ANI / @Hibakashif0X)

ஜூன் 10, நியூயார்க் (Sports News): அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) போட்டியில், நேற்று 19வது ஆட்டம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 19 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 119 ரன்கள் குவித்திருந்தது. அணியின் சார்பில் விளையாடிய ரோகித் சர்மா, விராட் கோலி என இருவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். பின் களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் அதிரடியாக விளையாடியதைத்தொடர்ந்து, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இவர்கள் இருவரும் மட்டும் 62 ரன்கள் எடுக்க, எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்பரன்களில் வெளியேறியதால் 19 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 119 என்ற இலக்கை முன்வைத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் நசீம் ஷா, ஹாரிஸ் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தனர். Youth Dies by Snake Bite: தன்னை தீண்டிய பாம்பின் தலையை சாப்பிட்ட இளைஞர் மரணம்; விஷம் தலைக்கேறி., ஆத்திர வெறியில் நடந்த பயங்கரம்.! 

எளிய இலக்கை எட்டிப்பிடிக்காத பாகிஸ்தான் (Ind Vs PAK): இதனையடுத்து. மறுமுனையில் 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் சார்பில் விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினாலும், அடுத்தடுத்து விக்கெட் இழந்து, ரன்கள் குவிக்க திணறியா காரணத்தால் இறுதியில் பாகிஸ்தான் அணி தோல்வியை அடைந்தது. ரசிகர்களுக்கு பல பரபரப்பு திருப்பங்களை கொடுக்கும் வகையில் அமைந்த இந்த போட்டியில், பாகிஸ்தானின் சார்பில் விளையாடியவர்களில் முகமது ரிஸ்வான் 44 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தார். பாபர் 10 பந்துகளில் 13 ரன், உஸ்மான் கான் 15 பந்துகளில் 13 ரன், வாசிம் 23 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்தனர். ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்த பாகிஸ்தான அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி அடைந்தது. இந்திய அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் பும்ரா மூன்று விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தனர். ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.

இம்ரான் கான் (Imran Khan) ஆதரவாளர்கள் கோரிக்கை: இதனிடையே, ஆட்டத்தின் போது பார்வையாளர்களை கவரும் வகையில், மைதானத்திற்கு மேலே வானில் விமானத்தில் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி வாசகம் ஒன்று பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஊழல், அரசு தகவலை கசியவிட்டது உட்பட பல்வேறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என அவரின் ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் உள்ள இம்ரான் கான் ஆதரவாளர்கள், இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் நடுவே இவ்வாறான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.