IND Vs SA 1st T20: சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்., வருணின் அபார பந்துவீச்சு.. தென்னாபிரிக்க மண்ணில் முதல் வெற்றிக்கனியை சுவைத்த இந்திய அணி.!

50 பந்துகளில் 107 ரன்கள் அடித்து அசத்திய சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம், தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணியின் வெற்றியை வழிவகை செய்தது.

Sanju Samson | IND Vs SA T20i 2024 (Photo Credit: @BCCI X)

நவமபர் 09, டர்பன் (Sports News): சூரிய குமார் யாதவ் (Surya Kumar Yadav) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவுக்கு (Team India South Africa Tour) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நான்கு டி20 ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா (IND Vs SA T20i Series 2024) அணிகள் மோதிக் கொள்கின்றன. இதன் முதல் ஆட்டம் நவம்பர் எட்டாம் தேதியான நேற்று அங்குள்ள டர்பன் நகரில் இருக்கும் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தது.

202 ரன்கள் குவித்த இந்திய அணி:

இந்திய அணியின் சார்பில் ஒப்பனிங்கில் களமிறங்கிய சஞ்சு சாம்சங் (Sanju Samson) 50 பந்துகளில் 107 ரன்கள் விளாசி இருந்தார். நேற்று ஒரே நாள் ஆட்டத்தில் அவர் 10 சிக்ஸர், 7 பவுண்டரி அடித்து ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் திலக் வர்மா 18 பந்துகளில் 36 ரன்கள் அடித்திருந்தார். ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழந்த இந்திய அணி, 202 ரன்கள் எடுத்திருந்தது. மறுமுனையில் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, நின்று ஆடினாலும் அணியினரின் அடுத்தடுத்த விக்கெட் மற்றும் ரன்கள் குவிக்க இயலாமை போன்ற காரணத்தால் தோல்வியே எஞ்சியது. 

Team India | IND Vs SA T20i Series 2024 (Photo Credit: @BCCI X)

நியூசிலாந்து தோல்விக்கு பின் முதல் வெற்றி:

அந்த அணி மொத்தமாக 17.5 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. சொந்த மண்ணில் தென்னாபிரிக்க அணி இத்தொடரில் முதல் தோல்வியை அடைந்தது. சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து - இந்தியா தொடரில், இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகள் மூன்றிலும் படுதோல்வி அடைந்து இருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய டி20 அணி முதல் போட்டியில் வெற்றி அடைந்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

ஜியோ சினிமாவில் பாருங்கள்:

இந்திய அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் ரவி, வருண் சக்கரவர்த்தி (Varun Chakaravarthy) ஆகியோர் தலா மூன்று விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர். தென்னாபிரிக்க அணியின் சார்பில் பந்து விசியவர்களில் ஜெரால்ட் மூன்று விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அடுத்த ஆட்டம் நாளை இரவு 07:30 மணிக்கு இந்திய நேரப்படி நடைபெறுகிறது. இந்த போட்டிகளை நீங்கள் ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் நேரலையில் பார்க்கலாம்.

சஞ்சு சாம்சனின் விக்கெட் பறிபோனபோது:

அதிரடியாக விக்கெட்டை கைப்பற்றிய இந்திய அணி:

தூக்கியடித்த ஜெரால்ட்:

கேம் சேஞ்சராக வருண் சக்கரவர்த்தி:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif