IND Vs BAN 1st Test: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா; திணறிய எதிரணி.!
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தியா Vs வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், இந்திய கிரிக்கெட் அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
செப்டம்பர் 22, சேப்பாக்கம் (Cricket News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச (Bangladesh Cricket Team) கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் (Team India) அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் தொடர் சென்னையில் உள்ள சேப்பாக்கம் (Chepauk Stadium) மைதானத்தில் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்றது. முதலில் இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் அணி 91.2 ஓவர்களுக்கு 10 விக்கெட்டையும் இழந்து 376 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, மறுமுனையில் களமிறங்கிய வங்கதேச அணி, அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து 47.1 ஓவரில் 10 விக்கெட் இழந்து 149 ரன்கள் மட்டுமே சேகரித்தது. IND Vs BAN Test: 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவு; கில் - பண்ட் அபார சதம்.. வங்கதேச அணி வெற்றிக்கு 357 ரன்கள் தேவை..!
இரண்டு இன்னிங்ஸிலும் திணறிய வங்கதேசம்:
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் சார்பில் விளையாடிய கில் (Shubman Gill) 176 பந்துகளில் 119 ரன்களும், ரிஷப் பண்ட் (Rishabh Pant) 128 பந்துகளில் 109 ரன்களும் அடித்து அசத்தியிருந்தனர். இதனால் அன்றைய நாளின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. வங்கதேச அணிக்கு எதிராக இமாலய இலக்கு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்க்சில் வங்கதேச அணி இலக்கை எட்டிப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த விதமான ஆட்டமும் உபயோகமாகாததால், இறுதியில் வங்கதேச அணி 62.1 முடிவில் 10 விக்கெட் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்திய அணி டெஸ்ட் தொடரில் வென்று சாதனை:
இதனால் முதல் டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று ஒரு புள்ளிகளை பெற்றுள்ளது. வங்கதேச அணியின் சார்பில் விளையாடியவர்களில் நஜ்முல் இரண்டாவது இன்னிங்சில் 127 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இருந்தாலும், பிற வீரர்கள் அனைவரும் சொற்ப அளவிலான ரன்களில் வெளியேறியதால், அணியின் தோல்வி உறுதியானது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளது.டெஸ்ட் தொடரின் இரண்டாவதாக ஆட்டம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இதனை ஜியோ சினிமா (Jio Cinema App) செயலியில் பார்க்கலாம். ஸ்போர்ட்ஸ் 18 (Sports 18 Tamil) தொலைக்காட்சியிலும் நேரலையை காணலாம்.
இந்திய அணி முதல் டெஸ்ட் தொடரில் வென்று சாதனை:
பும்ராவின் அசத்தல் செயல்:
சேப்பாக்கத்தில் மாஸ் காண்பித்த ஆர். அஸ்வின்: