IND vs SA 2nd Test: 55 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா... இந்தியா வரலாற்று சாதனை..!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி பௌலர்கள் தொடர்ந்து அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளனர்.
ஜனவரி 03, ஜோக்கன்ஸ்பர்க் (Cricket News): தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளது. இதில், இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி, செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது. இதனால் தொடரில் 1-0 என்கிற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது. Andhra horror: 16 வயது பெண் கூட்டு பலாத்காரம்... 2 நாட்கள் அறையில் அடைத்து கொடூரம்..!
55 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா: அதனைத் தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இன்று முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து இந்திய அணி பவுலிங் செய்தது. தொடர்ந்து அபாரமாக பந்து வீசிய இந்திய அணி 23.2 ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்து, தென்னாப்பிரிக்காவை ஆல் அவுட் ஆக்கி விட்டது.