MI Vs GT: வான்கடே மைதானத்தை அதிரவைத்த சூரியகுமார் யாதவ்.. நின்ற இடத்தில் 80 ரன்கள், 103 க்கு நோ அவுட்.!
பந்துவீச்சில், பேட்டிங்கிலும் சிறந்து விளங்கிய மும்பை அணி வீரர்களின் முயற்சியால் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை மண்ணில் தோல்வியை தழுவியது.
மே 13, வான்கடே மைதானம் (SPORTS NEWS): டாடா ஐபிஎல் 2023 (TATA IPL 2023) போட்டியின் 57வது ஆட்டம், நேற்று (12-05-2023) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் - குஜராத் டைட்டன்ஸ் (Mumbai Indians Vs Gujarat Titans) அணியும் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் மும்பை அணி மட்டை ஆட்டத்திற்கு தயாரானது.
மும்பை அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய இஷான் கிஷான் - ரோஹித் ஷர்மா ஜோடி அணிக்காக 38 பந்துகளில் 60 ரன்கள் குவித்தது. இதில் ரோஹித் ஷர்மா 6வது ஓவரில் அவுட் ஆகிவிட, சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav) களமிறங்கினார். Dowry Suicide: திருமணம் முடிந்த 5 ஆண்டுகளுக்குள் சோகம்; வரதட்சணை கேட்டு கொடுமை.. தூக்கில் தொங்கிய பெண்.!
களமிறங்கிய வேகத்தில் நிதானமாக, தீரமாக பந்தை எதிர்கொண்ட நாயகனின் ஆட்டத்தால் வான்கடே மைதானமே அதிர்ந்துபோனது. 49 பந்துகளில் 103 ரன்கள் எடுத்த சூரியகுமார் யாதவ், இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆட்டத்தின் போது 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் என நின்ற இடத்தில் இருந்து 80 ரன்களை சேகரித்தார்.
இதனால் மும்பை அணியின் மொத்த ரன்னும் அதிரடியாக உயர்ந்தது. ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழந்த மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 218 ரன்கள் அடித்தது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. குஜராத் அணியின் முதல் பேட்ஸ்மேன்கள் சாஹா, ஹில், பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
விஜய் ஷங்கர் மற்றும் டேவிட் மில்லர் சிறிது நேரம் நின்றி ஆடியதால், அணியின் ரன்கள் உயர தொடங்கியது. ஆட்டத்தின் இறுதியில் குஜராத் அணி மொத்தமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே குவிக்க இயன்றது. இதனால் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றி அடைந்தது. மும்பை அணியின் பந்துவீச்சும் நேற்று சரியாக இருந்ததால், எதிரணியினர் ரன்கள் குவிக்க இயலாமல் திணறிப்போயினர்.