IPL 2025 Retention: ஐபிஎல் 2025இல் அனைத்து அணிகளிலும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!
நவம்பர் 01, டெல்லி (Sports News): இந்திய அளவில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறும் ஐபிஎல் ஆட்டங்களை, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ (BCCI) தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. ஐபிஎல் ஆட்டங்களுக்கு என பல்வேறு விதிமுறைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்திற்கு முன்பு, வீரர்களை ஏலம் எடுப்பது தொடர்பான நிகழ்வுகள், பிரம்மாண்டமாக நடைபெறும். அந்தவகையில், 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் (IPL 2025) தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏலம் தொடர்பான விஷயமும் அடுத்தபடியாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் புதிய விதிகளின்படி ஐ.பி.எல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்களின் அணி வீரர்கள் பட்டியலில் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம். இந்த தக்கவைப்பு பட்டியலில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் (உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள்) இருக்கலாம். அதிகபட்சமாக 2 சர்வதேச போட்டியில் விளையாடாத (uncapped) வீரர்கள் இருக்கலாம். இந்த ஏலத்தில் அணிகளின் பயன்பாட்டு தொகை 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. Grand Masters Chess Championship 2024: சென்னை மக்களே ரெடியா?.. கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டி அறிவிப்பு.!
சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings):
எம்எஸ் தோனி
மதீஷ பத்திரன*
ருதுராஜ் கெய்க்வாட்
ரவீந்திர ஜடேஜா
சிவம் துபே
டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals):
அக்சர் படேல்
குல்தீப் யாதவ்
டிரிஸ்டன் ஸ்டப்ஸ்*
அபிஷேக் போரல்
குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans):
ரஷித் கான்*
சுப்மன் கில்
பி சாய் சுதர்சன்
ராகுல் தெவாடியா
ஷாருக் கான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders):
சுனில் நரைன்*
ரிங்கு சிங்
வருண் சக்ரவர்த்தி
ஆண்ட்ரே ரஸ்ஸல்*
ரமன்தீப் சிங்
ஹர்ஷித் ராணா
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants):
நிக்கோலஸ் பூரன்*
மயங்க் யாதவ்
ரவி பிஷ்னோய்
மொஹ்சின் கான்
ஆயுஷ் படோனி
மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians):
ரோஹித் சர்மா
சூர்யகுமார் யாதவ்
திலக் வர்மா
ஹர்திக் பாண்டியா
ஜஸ்பிரித் பும்ரா
பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings):
பிரப்சிம்ரன் சிங்
ஷஷாங்க் சிங்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore):
விராட் கோலி
ரஜத் படிதார்
யாஷ் தயாள்
ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals):
சஞ்சு சாம்சன்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ரியான் பராக்
சந்தீப் சர்மா
ஷிம்ரோன் ஹெட்மியர்
துருவ் ஜூரல்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad):
ஹென்ரிச் கிளாசென்*
பாட் கம்மின்ஸ்*
அபிஷேக் சர்மா
டிராவிஸ் ஹெட்*
நிதிஷ் குமார் ரெட்டி