அக்டோபர் 30, தலைமை செயலகம் (Sports News): தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ளும், இரண்டாவது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் (Chennai Grand Masters Chess Championship 2024) போட்டி வரும் நவம்பர் 05ம் தேதி முதல் 11ம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்படுகிறது. இப்போட்டியின் மொத்த பரிசு தொகையான ரூ.70 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது.
இந்திய வீரர்கள் பங்கேற்பு:
இப்போட்டி 7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்படும். இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் எரிகைசி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் பங்குபெறவுள்ளார்கள். West Indies Squad For WI Vs ENG: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..!
குகேஷின் வெற்றிக்கு முதல்படி:
கடந்தாண்டு சென்னையில் நடந்த கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் டி.குகேஷ் வெற்றி பெற்றதன் மூலம் அவர் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற உதவியது. உலக சாம்பியனாவதை நோக்கமாக கொண்ட அவரது பயணத்தில் ஒரு முக்கிய படியாக அவ்வெற்றி அமைந்தது. மேலும், வரும் நவம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரனை எதிர்த்து குகேஷ் விளையாட உள்ளார். இந்தாண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸில் பங்குபெறும் இந்திய செஸ் வீரர் அர்ஜுன் எரிகைசிக்கும் அதேபோல் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்புள்ளது.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2024:
இவ்வாண்டு, சென்னை கிராண்ட்மாஸ்டர் - சேலஞ்சர்ஸ் போட்டியும், மாஸ்டர்ஸ் போட்டியும் ஒரே நேரத்தில் நடத்தப்படும். இப்போட்டியில் 8 இந்திய மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி, வி. பிரணவ், எம். பிரனேஷ் மற்றும் ஆர். வைஷாலி கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டு ரவுண்ட் ராபின் முறையில் 7
சுற்றுகள் கொண்ட கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடுவார்கள்.
பரிசு விபரங்கள்:
இப்போட்டியில் வெற்றி பெறுபவர் அடுத்த ஆண்டு நடைபெறும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவார். மாஸ்டர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றிபெறுவோருக்கு ரூ. 15 இலட்சமும், சேலஞ்சர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றிபெறுவோருக்கு ரூ. 6 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படும் என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.