Hardik Pandya Banned: ஐபிஎல் 2025ல், ஹர்திக் பாண்டியா ஒரு போட்டியில் விளையாட தடை; அடுத்தடுத்த அபராததால் நடவடிக்கை.!
தனது அணியை மெதுவாக பந்துவீசும் வகையில் செயல்படுத்திய ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர் அடுத்த ஐபிஎல் 2025 சீசனில் முதல் போட்டியில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மே 18, மும்பை (Cricket News): ஐபிஎல் 2024 சீசனின் 67வது ஆட்டம், நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை - லக்னோ (MI Vs LSG) அணிகள் மோதிக்கொண்டன. போட்டியின் தொடக்கத்தில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் கேஎல் ராகுல் 41 பந்துகளில் 55 ரன்னும், நிகோலஸ் பூரான் 29 பந்துகளில் 75 ரன்னும் அடித்து அசத்தியிருந்தனர். இதனால் நேற்று லக்னோ அணி 214 ரன்களை குவித்து அசத்தி இருந்தது. Gunmen Shot Against Tourist in Afghanistan: சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கிசூடு; 4 பேர் பலி., ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி.!
பேட்டிங் & பவுலிங்கில் சொதப்பிய மும்பை: இதனையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை மண்ணில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் விளையாடியவர்களில் ரோஹித் சர்மா (Rohit Sharma) 38 பந்துகளில் 68 ரன்கள் அடித்தார். பின் அடுத்தடுத்து விக்கெட்டை தவறவிட்டு அணி தவிக்க, நமன் திர் 28 பந்துகளில் 62 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால், இறுதியில் மும்பை அணியால் தனது இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்த மும்பை அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை அடைந்தது.
ஹர்திக் (Hardik Pandya) பாண்டியாவுக்கு ஆப்பு: இந்த ஆட்டத்தின் முடிவு மும்பை அணிக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்த, அணியை வழிநடத்தி வரும் ஹர்திக் பாண்டியா மூன்றாவது முறையாக பிசிசிஐயிடம் சர்ச்சையில் சிக்கினார். அதாவது, அவர் அணியின் ஓவர் ரேட் விகிதத்தை மெதுவாக பராமரித்ததற்காக ரூ.30 இலட்சம் அபராதம் விதிக்கும் செயலுக்கு உள்ளாக்கப்பட்டார். தொடர்ந்து 3 வது முறை அவரின் தலைமையிலான அணி இவ்வாறான அபாரதத்தில் சிக்கிய காரணத்தால், ஐபிஎல் நடத்தை விதியின் கீழ் அடுத்த 2025 சீசனில், முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணி தான் எதிர்கொண்ட 14 போட்டியில் 4 போட்டிகளில் மட்டும் வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் கடைசி இடத்தை பதிவு செய்துள்ளது.