IPL Auction 2025 Live

IND vs ENG 5th Test: "எங்களை விட்டுவிடுங்கள் ப்ரோ".. இங்கிலாந்தைப் புரட்டி எடுக்கும் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் கூட்டணி..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது வெறித்தனமாக நடந்துக் கொண்டு வருகிறது.

IND vs ENG 5th Test (Photo Credit: @ICC X)

மார்ச் 08, இமாச்சலப் பிரதேசம் (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து (IND Vs ENG Test Series) கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்கு எதிராக விளையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலும், தோல்வியிலிருந்து மீண்டு வந்த இந்திய அணி அடுத்தடுத்து 3 போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை தனதாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் (Dharamsala) நேற்று முதல் நடைபெற்று வருகிறது. Six Sri Lankans Knifed To Death: கனடாவில் கத்திக்குத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 இலங்கையர்கள் பலி..!

ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் கூட்டணி: இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நேற்று தனது முதல் இன்னிங்சை துவங்கிய துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்கள். இந்த ஜோடி மொத்தம் 104 பார்ட்னர்ஷிப் அமைத்தது. பின்னர் ஜெய்ஸ்வால் அதிரடியாக 58 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இதற்கு அடுத்து ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் ( Rohit Sharma and Shubman Gill) விளையாட வந்தார். நேற்று இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. மேலும் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து 135 ரன்கள் எடுத்து 83 ரன்கள் பின்தங்கி இருந்தது.

இந்த நிலையில் இந்த ஜோடி இன்று மீண்டும் இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணிக்கு துவங்கியது. இதில் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும் சதம் அடித்து, இங்கிலாந்து அணியைப் புரட்டி போட்டுள்ளனர். தற்பொழுது இந்த ஜோடி 160 ரன்கள் ஆட்டம் இழக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது. தற்போது இந்திய அணி 60 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.