HBD Rohit Sharma: 37 வயதில் அடியெடுத்து வைத்த ஹிட்மேன்; பல சாதனைகள் படைக்க மனதார வாழ்த்தும் ரசிகர்கள்.!
இன்றைய நாளில் அவரின் சிறப்புக்கள் மற்றும் அதிரடி ஆட்டத்தின் செயல்பாட்டினையும் தெரிந்துகொள்ளலாம்.
ஏப்ரல் 30, Mumbai (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவர், இளைஞர் பட்டாளத்தின் நெஞ்சார்ந்த ஹிட் நாயகன், ரசிகர்களால் ஹிட்மேன் (Hitman) என வருணிக்கப்படுவர் ரோஹித் சர்மா (Rohit Sharma). இவர் இன்று தனது 37 வது பிறந்தங்ளில் அடியெடுத்து வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜாம்பவானாக திகழ்ந்த ரோஹித், பல இளைஞர்களுக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறார்.
2007ல் தொடங்கிய இந்திய அணிக்கான பயணம்: வலதுகை மட்டைப்பந்தில் சிறந்த வீரராக இருக்கும் ரோஹித், தான் கேட்பாங்க இருந்தபோது அதிரடி ஆட்டம் மற்றும் அமைதியான மனநிலை ஆகியவற்றால் கவனிக்கப்பட்டு ரசிகர்களையும் பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியத்துவம் பெரும் பவர் பிளேவில் சிறந்த வீரராக இருந்த ரோஹித், பன்முகத்தன்மை கொண்ட நபராகவும் இருந்தார். கடந்த 2007ம் ஆண்டு சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாட தொடங்கிய ரோஹித் சர்மா, 2007ல் ஐசிசி டி20 போட்டியிலும் கவனிக்கத்தக்க வகையில் செயல்பட்டார். பார்க்க குழந்தை முகம், மைதானத்தில் களமிறங்கினாள் கில்லி என்ற அதிரடியான நாயகன் இந்திய அணிக்காக பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.
6 ஐபிஎல் கோப்பைகள்: சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில், தான் கலந்துகொண்ட 262 ஒருநாள் போட்டியில் மொத்தமாக 10709 ரன்களை இவர் குவித்திருந்தார். அதிகபட்ஷமாக 264 ரன்கள் அடித்த ரோஹித், மொத்தமாக 55 அரைசதம், 31 சதம் ஆகியவற்றையும் கடந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மைல் கல்லாக இருந்த தோனி (10599), ராகுல் ட்ராவிட் (10768), கங்குலி (11221), விராட் கோலி (13848), சச்சின் (18426) ஆகியோரின் பட்டியலில் ரோஹித்தும் இடம்பெற்று இருக்கிறார்.டெஸ்ட் தொடரில் நட்சத்திர நாயகனாக தன்னை பல ஆண்டுகளாக நிலைநிறுத்திக்கொண்ட ரோஹித், டி20 போட்டியில் தனது தலைமையிலான அணியை வைத்து 6 கோப்பைகளை வென்று இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வந்த ரோஹித் கடந்த 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் வெற்றிக்கோப்பையையும் தட்டிச்சென்றுள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹிட்மேன் ரோஹித்: மொத்தமாக அவர் கலந்துகொண்ட 252 போட்டியில், 6522 ரன்களை குவித்துள்ள ரோஹித், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் சேர்ந்த வீரர்களில் நான்காவது வீராகவும் இருக்கிறார். அவருக்கு ரித்திகா சஜிதேக் என்ற மனைவியும், சமைரா என்ற மகளும் இருக்கின்றனர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நாயகனுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். நீங்களும் உங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்கலாமே!
மும்பை இந்தியன்ஸ் அணியின் பிறந்தநாள் வாழ்த்து:
கேசவலாக கேட்ச் பிடித்த ஹிட்மேன்:
மயிர்சிலிர்க்க வைக்கும் ஹிட்மேனின் ஹிட்ஸ் வீடியோ: