Virat Kohli's Net Worth: அசந்து போக வைக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா? வெளியான தகவல்.!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலியின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
நவம்பர் 05, மும்பை (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஆன விராட் கோலி (Virat Kohli) இன்று தனது 36வது பிறந்தநாளை (Birthday) கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி அசுர வளர்ச்சி அடைந்தார். சச்சினின் சில சாதனைகளை விராட் கோலி முறியடித்தார். அதிலும், குறிப்பாக ஒரு நாள் தொடரில் 50 சதங்கள் அடித்து இருந்த சச்சினின் சாதனையை விராட் கோலி குறைந்த இன்னிங்ஸ்களிலேயே முறியடித்து சாதனை படைத்தார்.
விராட் கோலியின் சாதனைகள்:
கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் இவர், இந்திய அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,040 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அதிகபட்சமாக 254 ரன்கள் அடித்து இருக்கிறார். அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 47.83 ஆகவும் உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 31 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும், 295 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் விராட் கோலி, 13,906 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அதிகபட்சமாக 183 ரன்கள் அடித்திருக்கிறார். ஒரு நாள் போட்டி சராசரி 58.18 ஆக உள்ளது. ஒருநாள் போட்டிகளில் 50 சதம், 72 அரை சதங்கள் அடித்து இருக்கிறார். IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது..? முழு விவரம் உள்ளே..!
சர்வதேச டி20-யில் 125 போட்டிகளில் விளையாடி இருக்கும் கோலி, அதில் 4,188 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது சர்வதேச டி20 சராசரி 48.69 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 137.04 ஆகும். சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 38 அரை சதங்கள் அடித்துள்ளார். அவர் 2024 டி20 உலகக் கோப்பை வென்றதோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
சம்பளம்:
பிசிசிஐ ஏ+ கிரேடு அந்தஸ்து பெற்றுள்ள விராட் கோலி வருடத்திற்கு ரூ.7 கோடி வருமானம் பெறுகிறார். இது தவிர ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.3 லட்சம் மற்றும் டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் வீதமும் சம்பளம் பெறுகிறார். ஐபிஎல் தொடர் மூலமாக வருடத்திற்கு ரூ.15 கோடி வீதம் வருமானம் பெறுகிறார். இதுதவிர பரிசுத் தொகை மூலமாகவும் வருமானம் ஈட்டுகிறார். பல முன்னணி நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாஸிடராக ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலமாகவும் வருடத்திற்கு ரூ.7.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார். விராட் கோலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவுக்கு மட்டும் ரூ.8.9 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார். எக்ஸ் பக்கத்தில் ஒரு எக்ஸ் பதிவிற்கு ரூ.2.5 கோடி வருமானம் ஈடுகிறார். இவை மட்டும் இல்லாமல் அவர் நிறைய தொழில்களில் முதலீடு செய்துள்ளார்.
சொத்து மதிப்பு:
விராட் கோலியிடம் ஆடி க்யூ7, ஆடி ஆர்8 எல்.எம்.எக்ஸ், ஆடி ஏ8 எல், ஆடி க்யூ8, ஆடி ஆர்.எஸ். 5, ஃப்ளையிங் ஸ்பூர், ரெனால்ட் டஸ்டர், ஆடி எஸ்5, ஆர் ஆர் வோக், டொயோட்டா ஃபர்ச்சூனர் என்று ஏராளமான கார்களை வைத்திருக்கிறார். கார்களின் மொத்த மதிப்பு மட்டும் ரூ.147 கோடி ஆகும். மேலும் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா, மும்பையில் தோராயமாக ரூ. 34 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பை வைத்துள்ளனர். மேலும் அவர்கள் அலிபாக்கில்(Alibaug) 8 ஏக்கர் பண்ணை வீடு மற்றும் குர்கானில்(Gurgaon)ஆடம்பரமான பங்களாவையும் வைத்திருக்கிறார்கள். எனவே ஒட்டுமொத்தமாக இந்த 2024 ஆம் ஆண்டில் விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.1090 கோடி என்று தகவல் தெரிவிக்கின்றது.