IND Vs ZIM Highlights: அடித்து நொறுக்கிய இந்திய அணி; 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஜிம்பாவே..!

அணியின் வீரர்கள் தங்களின் அசத்தல் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

IND Vs ZIM Tour 2024 (Photo Credit: @StarSportsIndia X)

ஜூலை 08, ஹராரே (Sports News): ஜிம்பாவே நாட்டுக்கு சுற்றுப்பயணம் (Team India Zimbawe Tour) மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் தற்போது ஒருநாள் டி20 (IND Vs ZIM T20 Tour 2024) தொடர்களில் விளையாடி வருகிறது. அந்த வகையில், ஜூலை 07ம் தேதியான நேற்று இரண்டாவது டி20 ஆட்டம் நடைபெற்ற நிலையில், முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் அபிஷேக் ஷர்மா, ருத்ராஜ் கைக்வாட் ஆகியோர் அடித்து ஆடியதால் அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது. MS Dhoni Birthday Celebration: கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சாக்ஷி தோனி; தல தோனிக்கு குவியும் வாழ்த்துக்கள்.! 

மிரட்டிய இந்திய அணியின் பேட்டிங்:

முதலில் களமிறங்க சுப்னம் ஹில் 4 பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆகி வெளியேறிவிட்டாலும், அபிஷேக் ஷர்மா 47 பந்துகளில் 100 ரன்கள் அடித்து சாதனை படைத்திருந்தார். அதனைத்தொடர்ந்து ருத்ராஜ் 47 பந்துகளில் 77 ரன்களும், ரிங்கு 27 பந்துகளில் 48 ரன்னும் அடித்திருந்தனர். நேற்றைய ஆட்டத்தில் அபிஷேக் ஷர்மா 8 சிக்ஸர்களையும், ருத்ராட்சம் 11 பவுண்டரிகளையும் விளாசி இருந்தனர். ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்தது.

100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி:

இதனையடுத்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் ஜிம்பாவே அணி களமிறங்கியது. அந்த அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் வெஸ்ஸி 39 பந்துகளில் 43 ரன்னும், பிரைன் 9 பந்துகளில் 26 ரன்னும், லுக் 26 பந்துகளில் 33 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். பிற அனைத்து வீரர்களும் சொற்பரன்களில் வெளியேறிய நிலையில், 18.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த ஜிம்பாவே அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 100 ரன்கள் வித்தியாசத்துடன் மிகப்பெரிய வெற்றியை இந்திய அணி அடைந்தது.

இந்திய அணி சார்பில் பந்து வீசியவர்களில் முகேஷ் குமார், ஆவெஷ் கான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியனர். ரவி பிஷ்ணோய் இரண்டு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அடுத்த ஆட்டம் வரும் 10ம் தேதி மாலை 04:30 மணியளவில் நடைபெறும்.

அடித்து நொறுக்கிய ரிங்கு சிங்:

அசத்திய இந்திய சிங்கங்கள்: