Dhoni Autograph to Fans: "ரசிகர்களுடன் நிரந்தரமான பந்தத்தில் கையெழுத்திடுகிறேன்" - நேரில் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிய தல தோனி.!

இன்னும் ஐபிஎல் போட்டி தொடங்க 09 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் விறுவிறுப்புடன் பயிற்சி பெறுகின்றனர்.

Dhoni Autograph to Fans IPL 2024 (Photo Credit: @ChennaiIPL X)

மார்ச் 13, சென்னை (Sports News): கிரிக்கெட் ரசிகர்களால் பெருவாரியாக எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள், இம்மாதம் 22ம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தலும் நடைபெறவுள்ளதால், முதல் 22 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே ஐபிஎல் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 10 அணிகள் மோதிக்கொள்ளும் போட்டித்தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கும் முதல் போட்டியில், சென்னை மற்றும் பெங்களூர் (CSK Vs RCB) அணிகள் மோதுகின்றன. இதனால் சென்னை மற்றும் பெங்களூர் அணியை சேர்ந்த வீரர்கள், சென்னை வந்து பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். Thala Dhoni Practice: "விசில் போடு மாமே" - ஐபிஎல் போட்டிக்காக தீவிரமாக தயாராகும் தல தோனி; அசத்தல் வீடியோ உள்ளே.!

புதிய தோற்றத்தில் அசத்தும் தோனியின் ஆட்டோகிராப்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி, கடந்த வாரம் முன்னதாக சென்னை வந்தார். தனது பழைய சிகை அலங்காரத்தில் மாஸ் தோற்றத்துடன் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தோனி பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கும்போது, தன்னை நேரில் காணவந்த ரசிகர்களுக்கு இன்முகத்துடன் ஆட்டோகிராப் வழங்கி மகிழ்ந்தார். இந்த விடியோவை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், "ரசிகர்களுடன் நிரந்தரமான பந்தத்தில் கையெழுத்திடுகிறேன்" என்ற தலைப்புடன் பதிவிட்டு இருக்கிறது. Dog Bit a Women: நடைப்பயிற்சி சென்ற பெண்ணை கடித்துக்குதறிய நாய்; நொடியில் நடந்த சம்பவம்.. காவல் நிலையத்தில் புகார்.! 

சிஎஸ்கே அணி வீரர்கள்: தோனி தலைமையிலான (CSK Team Squad 2024 IPL) அணியில் எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, அவனிஷ் ராவ் ஆரவெல்லி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், அஜய் மண்டல், நிஷாந்த் சிந்து, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷர்துல் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத், அஜிங்க்யா ரஹானே, சமீர் ரிஸ்வி ஆகியோர் விளையாடவுள்ளனர்.