Lucknow Dog Attack 13-March-2024 (Photo Credit: @bstlive X)

மார்ச் 13, லக்னோ (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, பிபிடி கிரீன் சிட்டி பகுதியில் தனியருக்கு சொந்தமான சன்பிரிட்ஜ் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் வசிப்போரில், சிலர் தங்களின் வீட்டில் நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். Rameswaram Cafe Blast: பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு விவகாரம்; சந்தேகத்திற்குரிய நபர் கைது.. என்.ஐ.ஏ விசாரணை.! 

பெண்ணை தாக்கிய நாய்: இந்நிலையில், நேற்று இக்குடியிருப்பை சேர்ந்த பெண்மணி ஒருவர் நடைப்பயிற்சி சென்று இருந்தார். அச்சமயம் அங்கு தனது (Lucknow Dog Bite Today) உரிமையாளருடன் வந்த நாய், பெண்ணை சற்றும் எதிர்பாராத விதமாக தாக்கியது. இதனால் உயிர் பயத்தில் அலறிய பெண்ணை நாயின் உரிமையாளர் மற்றும் குடியிருப்பு வளாக காவலாளிகள் பத்திரமாக மீட்டனர். Govt Hospital Inspection: நோயாளி போல் வேடமிட்டு மருத்துவமனைக்குள் ஆய்வு; மருத்துவர், பணியாளர்களின் அலட்சியத்தால் கொந்தளித்த ஐ.ஏ.எஸ்.! 

காவல் நிலையத்தில் புகார்: பின்னர் உடனடியாக பெண்மணி மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதனையடுத்து, பெண்மணி சம்பவம் தொடபிராக பிபிடி கிரீன் சிட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடரும் அவலம்: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் முதல், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் வரை மக்களை அவை தாக்குவது சமீபத்தில் அதிகரித்து இருக்கிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை வெளியே அழைத்து வரும்போது, அவைகளின் வாய் மூடி இருக்கும் பாதுகாப்பு பட்டையை அணிவித்து அழைத்து வருவது, அவைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க உதவும்.

அதிர்ச்சியூட்டும் காணொளி: