Rohit Sharma: தொடர்ந்து சொதப்பலான ஆட்டம்.. ஓய்வை அறிவித்து விடுங்கள் ரோஹித் சர்மா - ரசிகர்கள் விமர்சனம்..!

தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Rohit Sharma (Photo Credit: @piyushxcric X | @Khabarfast X)

டிசம்பர் 30, மெல்போர்ன் (Sports News): பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2024-25 தொடருக்கு முன்னதாகவே டெஸ்ட் போட்டிகளில், ரோகித் சர்மா (Captain Rohit Sharma) சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய ரோகித் சர்மா மீண்டும் துவக்க வீரராக களமிறங்கி 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 40 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். IND Vs AUS 4th Test: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி; இந்தியா படுதோல்வி.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

ரசிகர்கள் விமர்சனம்:

மேலும், கடைசியாக ரோகித் சர்மா விளையாடிய 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களில், 164 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதில், அவர் சராசரி 10 ரன்கள் மட்டுமே உள்ளது. இந்த பார்டர் பாஸ்கர் டெஸ்ட் (BGT 2024) தொடரிலும் அவர் அதிகபட்சமாக 10 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதனால், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தற்போது, இந்திய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.