SL Vs NZ 1st ODI: இலங்கை அணி 324 ரன்கள் குவிப்பு.. இருவர் சதமடித்து அசத்தல்..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட்களை இழந்து 324 ரன்கள் குவித்தது.

SL Vs NZ 1st ODI (Photo Credit: @SriLankaTweet X)

நவம்பர் 13, தம்புல்லா (Sports News): இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி (SL Vs NZ) மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி தம்புல்லாவில் (Dambulla) இன்று (நவம்பர் 13) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் பந்து வீசியபோது, மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் அரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. AFG Vs BAN 3rd ODI: குர்பாஸ், ஓமர்ஜாய் அதிரடி ஆட்டம்.. வங்கதேசத்திற்கு எதிரான தொடரை வென்று ஆப்கானிஸ்தான் அசத்தல்..!

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 12 ரன்னில் அவுட்டானார். அடுத்து, 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அவிஷ்கா பெர்னாண்டோ-குஷால் மென்டிஸ் 215 பந்துகளில் 206 ரன்கள் அடித்தனர். அப்போது, சதமடித்த நிலையில் அவிஷ்கா பெர்னாண்டோ (Avishka Fernando) 100 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த குஷால் மென்டிஸ் (Kusal Mendis) 128 பந்துகளில் 143 ரன்கள் குவித்தார். அதில், 2 சிக்சர்கள் மற்றும் 17 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில், இலங்கை அணி 49.2 ஓவர்களில் விளையாடிக் கொண்டிருந்த போது, மழை குறுக்கீடு காரணமாக முதல் இன்னிங்ஸ் முடிவு பெற்றது. இலங்கை அணி 5 விக்கெட்களை இழந்து 324 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில் ஜேக்கப் டப்பி (Jacob Duffy) 3, பிரேஸ்வெல், சோதி தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். மழை நின்ற பிறகு நியூசிலாந்து அணி தனது இன்னிங்ஸை தொடங்கும்.