Vinod Kambli: கிரிக்கெட்டர் வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி; உடல்நலக்குறைவால் சிகிச்சை..!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் வினோத் காம்ப்ளி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
டிசம்பர் 23, ஹைதராபாத் (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி (Viond Kambli). சச்சினின் இளவயது நண்பரும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவருமான வினோத், தற்போது தனது குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 52 வயது ஆகிறது. ஒருநாள் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர், தனது ஓய்வுக்கு பின்னர் பயிற்சி மையம் அமைத்தும் பல வீரர்களை உருவாக்கி இருக்கிறார். Champions Trophy 2025: முடிவுக்கு வந்த இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை.. சாம்பியன்ஸ் டிராபி 2025.., முழு விவரம் உள்ளே..!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி:
மராட்டிய கிரிக்கெட் அகாடமியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு இருந்த வினோத் காம்ப்ளி, ஹைதராபாத்தில் இருக்கும் ஆகிருதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பான காணொளி வெளியாகியுள்ள நிலையில், அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் நலமுடன் இருக்கும் வினோத்: