டிசம்பர் 23, துபாய் (Sports News): பாகிஸ்தானில் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் அணி பங்கு பெறுவதில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது. இந்திய அணி பாதுகாப்பு பிரச்சனைகளின் காரணமாக பாகிஸ்தானில் விளையாடுவது சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக, 2008ஆம் ஆண்டு முதல் இந்திய அணி பாகிஸ்தான் செல்வதை முற்றிலுமாக தவிர்த்தது. இந்நிலையில், அதன் பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் (IND Vs PAK) விளையாடும் போட்டிகளுக்கான இறுதி இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது. RSA Vs PAK 3rd ODI: சொந்த மண்ணில் தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா.. ரிஸ்வான் தலைமையில் பாகிஸ்தான் அசத்தல்..!
சாம்பியன்ஸ் டிராபி 2025:
இந்நிலையில், இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் நீடித்தது. ஆனால், பிசிசிஐ (BCCI) இந்திய அணி விளையாடும் போட்டிகளை துபாயில் நடத்துமாறு ஐசிசிக்கு கோரிக்கை வைத்தது. இதனையடுத்து, பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இந்திய அணி விளையாடும் போட்டிகளை துபாயில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்டில் (UAE) நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மொசின் நக்வி மற்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷேக் நஹ்யான் அல் முபாரக் ஆகியோர் சந்தித்து பேசிக்கொண்டனர்.
துபாயில் நடத்த முடிவு:
இதனையடுத்து வெளிவந்த அறிக்கையின் படி, பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் விளையாடும் போட்டி துபாயில் (Dubai) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 20ஆம் தேதி இந்திய அணி வங்கதேசத்தையும், மார்ச் 02ஆம் தேதி நியூசிலாந்து அணியும் எதிர்கொள்கிறது. எனவே, இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும் என்று இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அரை இறுதி ஆட்டங்கள் மார்ச் 04 மற்றும் 05 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிலையில், இந்திய அணி தகுதி பெற்றால் அந்தப் போட்டிகளும் துபாயில் நடைபெறும். தகுதி பெறவில்லை என்றால் பாகிஸ்தானின் லாகூரில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மார்ச் 09ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், அதுவும் துபாயில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.