Chennai Formula 4 Night Race: சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம்.. வெற்றியாளர்களின் முழு விபரம் இதோ..!

சென்னையில் இரு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற பார்முலா-4 கார் பந்தயம் நேற்றிரவு நிறைவடைந்தது.

Formula 4 (Photo Credit: @dstock_insights X)

செப்டம்பர் 02, சென்னை (Chennai News): தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், தனியார் அமைப்பும் இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 நைட் ரேஸ்-ஐ நடத்தின. இதற்கு முன் இந்தியா கண்டிராத ஓர் மிக சிறந்த மற்றும் முதல் ஸ்ட்ரீட் ரேஸ் இதுவாகும். ரேஸ் 1 மற்றும் ரேஸ் 2 என இரண்டாக இது நடைபெற்றது. மேலும், இதில் மூன்று பிரிவுகளின் ரேஸ் நடைபெற்றன. ஜேகே ஃபார்முலா எல்ஜிபி 4 (JK Formula LGB 4), இந்தியன் ரேசிங் லீக் (IRL) மற்றும் ஃபார்முலா 4 (Formula 4) ஆகியவையே அவை ஆகும். Paralympics 2024: வெள்ளி, வெண்கலம் என இந்தியாவை அடுத்தடுத்து பெருமைப்படுத்திய பாராலிம்பிக் வீரர்கள்; நிஷாத், ப்ரீத்தி சாதனை.!

நேற்றைய முடிவுகள்: ஜேகே ஃபார்முலா எல்ஜிபி ரேஸ் 2வில், டார்க் டான் டீமைச் சேர்ந்த டிஜில் ராவ் 27:03.653நிமிடங்களில் பத்து சுற்றுகளை நிறைவு செய்து முதல் இடத்தைப் பிடித்தார். ஐஆர்எல் ரேஸ் 2வில் அல்வரோ பேரெண்டோ இவரே இந்த பந்தயத்தில் முதல் இடத்தை பிடித்தார். ஃபார்முலா 4 ரேஸ் 2-வில் தெற்காப்பிரிக்காவைச் சேர்ந்தவரும், பிளாக் பர்ட்ஸ் ஹைதராபாத் டீமைச் சேர்ந்தவருமான அகில் அலிபாய்-யே முதல் இடத்தைப் பிடித்தார். இதில் வென்றவர்களுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif