38th National Games 2025: தேசிய விளையாட்டுப் போட்டிகள்.. தங்கம் வென்ற தமிழக வீரர்.!
தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2025 தற்போது உத்தரகாண்டில் நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி 04, டேராடூன் (Sports News): உத்தரகண்டில் உள்ள டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி வைத்தார். மேலும், இந்த போட்டிகள், “ஜனவரி 28 முதல் பிப்ரவரி 14 வரை” உத்தரகண்டின் எட்டு மாவட்டங்களில் உள்ள 11 நகரங்களில் நடைபெறும். நாடு முழுவதிலுமிருந்து 10,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள். Tata Steel Chess 2025: டாடா ஸ்டீல் செஸ் போட்டி.. குகேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா.!
அசத்தும் தமிழகம்:
நேற்று ஆடவருக்கான பளுதூக்குதலில் +109 கிலோ எடை பிரிவில் தமிழகத்தின் எஸ்.ருத்ராமயன் 355 கிலோ எடையை தூக்கி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்நாட்ச் பிரிவில் அவர், தேசிய சாதனையை படைத்தார். ஸ்குவாஷில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீரரான அபய் சிங் வெண்கலப் பதக்கம் பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் ராதிகா சீலன், பூஜா ஆர்த்தி ஆகியோர் வெண்லக் பதக்கம் கைப்பற்றினர். 10 மீட்டர் ஏர் ரைஃபிள் (10m Air Rifle) பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜு நர்மதா நிதின் (Raju Narmada Nithin) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 37 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் நேற்றைய நிலவரப்படி தமிழகம் 9 தங்கம், 12 வெற்றி, 13 வெண்கலம் என 34 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)