GJ Vs LSG: இலக்கை நெருங்க போராடி தோற்ற லக்னோ ஜெயிண்ட்ஸ்.. வெளுத்து வாங்கிய குஜராத் சிங்கங்கள்..! மாஸ் வெற்றி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி.!
லக்னோ அணி பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல், ரன்கள் சேர்க்க திணறி விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.
மே 07, குஜராத் (Cricket News): குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற 51வது டாடா ஐ.பி.எல் 2023 தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணியும் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் குஜராத் அணி பேட்டிங் செய்தது.
2 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணியினர் 227 ரன்கள் குவித்து அசத்தினர். அவ்வணியின் சார்பில் விளையாடிய சாகா 43 பந்துகளில் 81 ரன்னும், கில் 51 பந்துகளில் 94 ரன்னும் என அடித்து நொறுக்கியதால் அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது. கில் இறுதி வரை தனது விக்கெட்டை இழக்கவில்லை. Dharsha Gupta: ரோஸ் நிற புடவையில் கிறங்கவைக்கும் பார்வை; தர்ஷா குப்தாவின் வேற லெவல் போட்டோ வைரல்.!
இதனையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் சார்பில் விளையாடிய பல வீரர்கள் அடுத்தடுத்து தங்களின் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ரன்கள் சேர்க்க இயலாமல் திணறி, இறுதியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்.
லக்னோ அணி சார்பில் விளையாடிய மேயர்ஸ் 32 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தார். காக் 41 பந்துகளில் 70 ரன்னும், ஆயுஷ் 11 பந்துகளில் 21 ரன்னும் என 3 வீரர்கள் மட்டுமே ரன்களை அணிக்காக சேர்க்க முடிந்தது. பிற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறிவிட, இறுதியில் 7 விக்கெட்டை பறிகொடுத்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் அடித்து தோல்வியை தழுவியது.