Para Athlete 100m: 100 மீட்டர் அளவிலான பாரா தடகளப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது இந்தியா..!
தொடர்ந்து பதக்கங்களை இந்திய சிங்கங்கள் குவித்து வருகிறது.
அக்டோபர் 26, ஹாங்சோ (Sports News): சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளின் தொடர்ச்சியாக, ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 22 விளையாட்டு பிரிவுகளில், 10 ஆசிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் போட்டியிடுகின்றன.
ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியா தற்போது வரை 779 பதக்கங்களை வென்று இருக்கிறது. நடப்பு ஆண்டில் மட்டும் 28 தங்கப்பதக்கம் உட்பட 107 பதக்கங்கள் நமதாகியது. US Shocker: அதிநவீன துப்பாக்கியை கொண்டு அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிசூடு; 22 பேர் பலி., 60 பேர் படுகாயம்.. அமெரிக்காவில் பயங்கரம்.!
தற்போது ஆசிய நாடுகளுக்கு இடையேயான பாரா ஆசிய நாடுகள் விளையாட்டுப்போட்டிகள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சார்பில் விளையாடிய வீரர்களின் வெற்றிக்கு அடையாளமாக தற்போது வரை 15 தங்கம், 20 வெள்ளி, 29 வெண்கலம் என 64 பதக்கங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது பாரா தடகளப்போட்டியில் (Para Athlete), ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நாராயண் தாகூர், T35 பிரிவில் (Narayan Takur) 14.37 நொடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
அதேபோல, ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஸ்ரேயான்ஸ் திரிவேதி (Shreyansh Trivedi), T37 பிரிவில் 12.24 நொடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.