
பிப்ரவரி 19, வதோதரா (Sports News): சிறுவயதில் கிரிகெட்டிலும், நீச்சலிலும் வளர்ந்து சாதிப்பேன் என நினைத்துக் கொண்டிருந்த சிறுமிக்கு வினோத விபத்து நிகழ்ந்து அதனால் தன் வாழ்நாள் முழுவதும் கை கால்கள் செயல்படாமல் வீல் சேரில் தான் மீதமுள்ள வாழ்க்கை எனத் தெரிந்தால் எவ்வாறு இருக்கும். சினிமா கதை போல் இருக்கிறது அல்லவா இது கதை அல்ல ஒரு தன்னம்பிக்கையாளரின் நிஜ வாழ்க்கை.
ப்ரீத்தி ஶ்ரீனிவாசனின் மனதை தொடும் கதை:
3 வயதிலிருந்து நீச்சல் பயிற்சி பெற்றதால், சிறுமியாக இருக்கும் போதே தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன். மேலும் தனது 8 வயதில் தமிழகத்தில் கிரிகெட் அணியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் 19 வயதிற்குட்பட்ட தமிழகப் பெண்கள் கிரிகெட் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார். தனது தந்தையின் ஊக்கம், ஆங்கிலப்புலமையையும் படிப்பையும் எளிமையாக மாற்றியுள்ளது. பள்ளிகளில் டாப்பராகவே இருந்துள்ளார் ப்ரீத்தி. இந்திய மகளீர் கிரிகெட்டில் அணியில் விளையாட வேண்டும் என்ற கனவு இருந்ததால், அமேரிக்காவில் கிடைத்த உயர்கல்வி வாய்ப்பையும் உதறிவிட்டு இந்தியா திரும்பிய ப்ரீத்தி ஐந்தாண்டு MBA படிப்பை மேற்கொண்டுள்ளார்.
தனது 18 வயதில் கல்லூரியில் 2ம் ஆண்டு அடி எடுத்து வைப்பதற்கு முன் பாண்டிசேரிக்கு கல்லூரி நண்பர்களுடன் எக்ஸ்கர்சன் சென்ற இடத்தில் தோழிகளுடன் இரண்டு அடி தண்ணீரில் விளையாடிக்கொண்டிருக்கையில், எதிர்பாராதவண்ணம் நிகழ்ந்த விபத்தில், ஒரே நொடியில் கழுத்தெழும்பு உடந்து முதுகுவடதண்டு மற்றும் நரம்புகள் பாதிப்படைந்து கழுத்திற்கு கீழான உடல்பாகங்கள் செயலிழந்து விட்டது. அது வரை தான் வாழ்நாளில் துன்பங்களை சந்திக்காத, கிரிகெட்டில் சாதனையாளராக இருக்க வேண்டும் என்று நினைத்து வாழ்ந்த ப்ரீத்திக்கு ஒரு நொடியில் வாழ்க்கை முற்றிலுமாக மாறுபட்டு விட்டது. ஆனால் ஒன்று மற்றும் மாறவில்லை அவருக்கு பெற்றோர் அளித்த பாசமும் அன்பும். IPL 2025 Chennai Stadium Matches: ஐபிஎல் 2025: சென்னையில் நடக்கவுள்ள ஆட்டங்கள் என்னென்ன? தகவல் இதோ.!
தினமும் இந்த நாள் எழுந்து நடந்து, பழைய நிலைக்கு மாறிவிடுவோம் என மூன்று ஆண்டுகளாவே நம்பியும் வந்திருக்கிறார். ‘மற்றவர்களைப் போலவே எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என நினைத்து பலமுறை அழுததுண்டு. தானாக சாப்பிட கூட முடியாது’ என பல நேர்காணலில் கூறியிருக்கிறார் ப்ரீத்தி. ஆனால் இனி வீல் சேரில் தான் வாழ்க்கை என ஏற்றுக்கொள்ளவும் ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அவரின் சாதனைபுரிய வேண்டும் என்ற கனவும் அவரின் வீல் சேர் முடக்கவில்லை.
தனது தந்தையின் இறப்பும், அடுத்தடுத்து அவரின் அம்மாவிற்கு நடந்த அறுவை சிகிச்சைகளும் பெற்றோருக்குப்புக்கு பின் யார் தன்னை பார்த்துக் கொள்வார் என்ற கேள்வியுடன் தன்னைப் போன்றவர்களுக்கு யார் இருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்ததால் உருவானதே அவரின் மாற்றுதிறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம்.
தன்னை போலவே முதுகுத்தண்டுவடம் பாதிப்படைந்தும், கை கால் ஊனமுற்றும் இருப்பவர்கள் சரியான மருத்துவ வசதியும் வாழ்க்கை நடைமுறையும் தெரியாமல் இருக்கிறார்கள். இவர்களைகளுக்காக ப்ரீத்தி ஸ்ரீனிவாசன் ‘சோல்ஃப்ரீ இன்ஸ்பயர் செண்டரை’ தொடங்கி நடத்தி வருகிறார். மாற்றுத் திறனாளியாளர்களுக்கு சரியான சிகிச்சை முறையும், அவர்களை எவ்வாறு தங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற கற்பித்தலையும் சேவையாக செய்து வருகிறார்.
இந்தியாவில் முதுகுதண்டுவடம் பாதித்தவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் இந்தியாவில் குறைவு என்பதாலும், மாற்றுதிறனாளிகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்காகவும் இந்த சேவையையும் செய்து வருகிறார் இதை ஊக்குவிக்க தமிழக அரசும் பல நிதி உதவிகளையும் செய்து வருகிறது. இவரின் பேச்சுகள் சாக வேண்டும் என நினைப்பவரையும் இரண்டு முறை வாழ ஆசை வர வைக்கும். இவரின் பேச்சுகள் பலருக்கும் வாழ உந்துதலை அளித்து வருகிறது.
இவரின் சேவைகளுக்காக பல விருதுகளை பல இடங்களில் பெற்று சாதனைபுரிந்து இருக்கிறார். பெண் சாதனையாளர் விருது, மாற்றத்தின் முகவர் விருது, சமூகப்பணிக்கான சுதேசி பத்திரிக்கையின் துருவவிருது, தமிழக அரசின் கல்பனா சால்வா விருது, மேலும் பல தொலைகாட்சி, மற்றும் நிறுவனங்களில் விருதுகளையும் பெற்று வருகிறார். ஏதாவது ஒரு துறையில் சாதனைப்புரிய நினைத்த ப்ரித்தி பல இடங்களில் விருது பெருவதையே சாதனையாக செய்து வருகிறார்.