Lottery (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 03, திருவனந்தபுரம் (Kerala News): கேரளா லாட்டரி துறை சார்பில் ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரி டிக்கெட் களுக்கான (Kerala Bumper Lottery) குலுக்கல் நடத்தப்பட்டு பல கோடிகளில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி, கோடைகால பம்பர் லாட்டரி, விஷு பம்பர் லாட்டரி, மான்சூன் பம்பர் லாட்டரி, திருவோணம் பம்பர் லாட்டரி மற்றும் பூஜா பம்பர் லாட்டரி என 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளுக்கான குலுக்கல் நடத்தப்படும். அந்த வகையில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் BR-95 கேரளா லாட்டரி (Kerala Lottery X'mas New Year Bumper 2024-2025) டிக்கெட்டுகள் டிசம்பர் 12, 2024 அன்று விற்பனைக்கு தொடங்கப்பட்டன. பிப்ரவரி 5ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு குலுக்கல் நடைபெற உள்ளது. குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலும் வெளியிடப்படவுள்ளது. Budget 2025: பட்ஜெட் 2025 அறிவிப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ.!

மொத்த பரிசுத் தொகை (Prize Structure):

முதல் பரிசாக 20 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ள நிலையில் அந்த லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்யும் ஏஜென்டிற்கு 10 சதவீத கமிஷன் தொகையாக 2 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட உள்ள நிலையில் கமிஷன் தொகையாக ஒவ்வொரு ஏஜென்டிற்கும் தலா 10 லட்சம் என மொத்தம் 2 கோடி ரூபாய் கமிஷன் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பரிசாக 10 பேருக்கு தலா 25 லட்சம் ரூபாய் என மொத்த பரிசு தொகையாக 2.50 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ள நிலையில் கமிஷன் தொகையாக ஒவ்வொரு ஏஜென்டிற்கும் இரண்டரை லட்சம் ரூபாய் என மொத்தம் 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

நான்காம் பரிசாக 10 பேருக்கு தலா 3 லட்சம் ரூபாய் என மொத்தம் 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஐந்தாம் பரிசாக 10 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய் என 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ள நிலையில் கமிஷன் தொகையாக ஒவ்வொரு ஏஜென்ட்டுக்கும் தலா 20,000 ரூபாய் என மொத்தம் 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதேபோல் ஆறாம் பரிசாக சுமார் 16,200 பேருக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதன்படி பரிசுத்தொகை சுமார் 8 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஏழாம் பரிசாக 32,400 பேருக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதேபோல் எட்டாம் பரிசாக ஆயிரம் ரூபாய் 64 ஆயிரத்து 800 பேருக்கு வழங்கப்பட உள்ளது. ஒன்பதாம் பரிசாக 2 லட்சத்து 75 ஆயிரத்து 400 பேருக்கு தலா 500 ரூபாய் வழங்கப்பட உள்ளது. பத்தாம் பரிசாக தலா 400 ரூபாய் சுமார் 3 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.