ICC Men's World Cup 2023: ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா Vs பாகிஸ்தான், இங்கிலாந்து போட்டிகள் என்று நடைபெறும்?.. முழு விபரம் இதோ.!
ஐ.சி.சி கிரிக்கெட் தொடரில் உலகளாவிய ரசிகர்கள் எதிர்பார்த்த 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜூன் 27, புதுடெல்லி (New Delhi): ஐ.சி.சி 2023 உலகக்கோப்பை 1.2 இலட்சம் அடி உயரத்தில் வானில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டு, பின் இந்தியா முழுவதும் கோப்பை மாநிலங்கள் வாரியாக அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து, 18 நாடுகளும் ஐ.சி.சி உலகக்கோப்பை 2023 அனுப்பி வைக்கப்படுகிறது.
அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கும் ஐ.சி.சி ஒருநாள் உலகக்கோப்பை போட்டி, நவம்பர் மாதம் 19ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 5 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 5 ஆட்டத்தில் இந்தியா Vs ஆஸ்திரேலியா, நியூசிலாந்து Vs பங்களாதேஸ், நியூசிலாந்து Vs ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் Vs ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் Vs தென்னாபிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இறுதிச்சுற்று தகுதி 1 போட்டி மும்பையிலும், 2ம் போட்டி கொல்கத்தாவிலும், இறுதி போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி ஒருநாள் போட்டித்தொடர் இந்திய ரசிகர்களால் பெருமளவு வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக். 12-ல் அகமதாபாத் மைதானத்தில் மோதுகின்றன. இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி 29 அக், அன்று லக்னோ அணி மோதுகிறது. 10 அணிகள் தங்களுக்குள் பலபரீட்சை நடத்துகிறது. ஒவ்வொரு அணியும் தலா ஒரு நாடுடன் ஒருமுறை என போட்டியிடுகிறது. தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணிகள் தங்களுக்குள் மீண்டும் பலபரீட்சை நடத்திக்கொள்ளும்.