IND Vs NZ: இந்திய அணிக்கு இமாலய இலக்கை குவித்த நியூசிலாந்து; ஒற்றை ஆளாக 130 ரன்கள் விளாசிய மிட்செல்..!
அவரின் அதிரடி ஆட்டத்தினால் அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது.
அக்டோபர் 22, (Sports News): ஐசிசி உலகக்கோப்பை 2023 (ICC Cricket World Cup 2023) போட்டித்தொடர், இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 21வது ஆட்டம், இன்று இந்தியா - நியூசிலாந்து (India Vs New Zealand) அணிகளுக்கு இடையே ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய (Team India) அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் நியூசிலாந்து (Team New Zealand) அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்தின் சார்பில் விளையாடிய வீரர்கள் அடித்து ஆடியதால், அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது.
இந்த ஆட்டத்தில் கான்வே 9 பந்துகளில் ஒரு ரன்கள் கூட அடிக்காமல் கேட்ச் அவுட்டாகி வெளியேறினார். வில் யங் 27 பந்துகளில் 17 ரன்னும், ரசின் 87 பந்துகளில் 75 ரன்னும், மிட்செல் (Daryl Mitchell) 127 பந்துகளில் 130 ரன்னும், கிளன் 26 பந்துகளில் 23 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். Chengalpattu Shocker: குதிரை சவாரி தொழிலாளி கொடூரமாக வெட்டிக்கொலை; கஞ்சா போதை ஆசாமிகள் 5 பேரிடம் விசாரணை.!
ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது. நடப்பு உலகக்கோப்பை தொடரில், தொடர் வெற்றிகளை கண்ட இந்தியாவின் நிலை இன்று என்னவாகப்போகிறது என்பது ஆட்டத்தின் இறுதியில் தெரியவரும். இந்த போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்கி இருக்கிறது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் சார்பில் டாம் லதம், டேவன் கான்வே, வில் யங், ரசின் ரவிந்த்ரா, டேரில் மிச்செல், கிளன் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிச்செல் சான்ட்நெர், மாட் ஹென்ரி, லோக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் விளையாடி இருந்தனர்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா (Rohit Sharma), ஷுப்னம் ஹில், விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ், மொஹம்மத் ஷமி, மொஹம்மத் சிராஜ் ஆகியோர் விளையாடினர்.