IND vs NZ Women's T20 WC: இந்தியா - நியூசிலாந்து மகளிர் டி20 ஆட்டத்தில் இந்திய படுதோல்வி; அம்பயரிடம் இந்திய கேப்டன் வாதம்.! காரணம் என்ன?.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 ஆட்டம் குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Harmanpreet Argument with Umbire (Photo Credit: @cricket543210 X)

அக்டோபர் 05, துபாய் (Cricket News): ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை 2024 (2024 ICC Women’s T20 World Cup) ஆட்டம், கடந்த அக்.02 முதல் தொடங்கிஅக்.20 அன்று நிறைவு பெறுகிறது. வங்கதேசத்தில் நடைபெறவிருந்த போட்டிகள், அங்கு நிலவிய உள்நாட்டு குழப்பத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. 10 அணிகள் மோதிக்கொள்ளும் ஒன்பதாவது ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில் வங்கதேசம், ஆஸ்திரியா, இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தான், ஸ்காட்லாந்த்து, இலங்கை அணிகள் பங்கெடுத்துள்ளன.

இந்திய அணி போட்டி நாட்கள் விபரம்:

இதில் இந்திய அணி அக்.04 தேதியான நேற்று நியுசிலாந்து அணியுடன் மோதியது. அடுத்ததாக அக்.06 அன்று பாகிஸ்தானுக்கு எதிராகவும், அக்.09 அன்று இலங்கைக்கு எதிராகவும், அக்.13 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் நடைபெறும் போட்டிகளில் பங்கெடுக்கிறது. அக்.20 அன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த ஆட்டங்களை இந்திய மக்கள் அனைவரும் டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல்:

நேற்று நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 160 ரன்களை குவித்து இருந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் சுசீ பேட்ஸ் 24 பந்துகளில் 27 ரன்னும், ஜியார்ஜியா ப்லிம்மேர் 23 பந்துகளில் 34 ரன்னும் அமேலியே கேர் 22 பந்துகளில் 13 ரன்னும், ஷோபி 36 பந்துகளில் 57 ரன்னும் அடித்து அசத்தி இருந்தனர். இதனையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. IND Vs NZ Women's T20 WC 2024: மகளிர் டி20 உலகக்கோப்பை 2024; இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை..! 

இந்திய அணி தோல்வி:

இந்திய அணியின் சார்பில் களமிறங்கியவர்களில் ஸ்ம்ரிதி 13 பந்துகளில் 12 ரன்னும், ஹர்மன்ப்ரீத் 14 பந்துகளில் 15 ரன்னும், ஜெமியா 11 பந்துகளில் 13 ரன்னும், ரிச்சா கோஷ் 19 பந்துகளில் 12 ரன்னும், தீப்தி 18 பந்துகளில் 13 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதனால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 19 ஓவரில் 10 விக்கெட்களையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து பெண்கள் அணி அபார வெற்றி அடைந்தது.

ஹர்மன்ப்ரீத் (Harmanpreet Kaur) வாக்குவாதம்:

போட்டியின் நடுவே நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது, 14 வது ஓவரில் நியூசிலாந்து அணியின் அமேலியே கேர் இரட்டை ரன்கள் எடுக்க ஆசைப்பட்டு ரன் அவுட் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால், அவருக்கு ரன் அவுட் கொடுக்கவில்லை. இதனால் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் அம்பயர்களிடம் துசார்ந்த கோரிக்கை வைத்தார். எனினும், அவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அடுத்த பந்திலேயே கேர் தனது விக்கெட்டை கேட்ச் அவுட்டில் பறிகொடுத்தார்.

அம்பயர்களுடன் ஹர்மன்ப்ரீத் வாதம் செய்யும் காட்சிகள்: