IND Vs BAN Test: 88 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.. இந்தியா நிதான ஆட்டம்..!

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியின் மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 88 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து நிதானமாக விளையாடி வருகின்றது.

IND Vs BAN 1st Test (Photo Credit: @ShuklAnandMohan X)

செப்டம்பர் 19, சென்னை (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி, முதல்போட்டி (IND Vs BAN 1st Test, Day 1) இன்று (செப்டம்பர் 19) சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. Chess Olympiad 2024: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி; தொடர்ந்து 6-வது சுற்றில் இந்தியா வெற்றி..!

இதனையடுத்து, இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இணை களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா (Rohit Sharma) 6 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சுப்மன் கில் (Shubman Gill) டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட விராட் கோலியும் (Virat Kohli) 6 ரன்களில் நடையைக் கட்டினார். இதன்பின்னர், ரிஷப் பண்ட் - ஜெய்ஸ்வால் கூட்டணி நிதானமாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 23 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 88 ரன்கள் அடித்தது. ஜெய்ஸ்வால் 37 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில், ஹசன் மஹ்மூத் (Hasan Mahmud) இந்தியாவின் 3 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா நிதான ஆட்டம்: