IND Vs WI: 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது இந்தியா; சுருண்டு விழுந்த மேற்கிந்திய தீவுகள் அணி.!
வெஸ்ட் இண்டீஸ் அணி 2 ஆட்டங்கள் சேர்ந்து 280 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்தியா அணி 5 விக்கெட் இழப்புக்கு நின்று ஆடி 421 ரன்கள் குவித்து முதல் வெற்றியை தக்கவைத்து.
ஜூலை 15, வெஸ்ட் இண்டீஸ் (Cricket News): மேற்கிந்திய தீவுகளில் இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி மோதிக்கொள்ளும் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஓடிஐ உட்பட 10 போட்டிகளில் விளையாடுகிறது.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் போட்டிகளை முடித்துக்கொண்டு இந்திய அணி சுதந்திர தினத்திற்கு முன்பு தாயகம் திரும்புகிறது. டொமினியாவில் இருக்கும் விண்ட்ஸர் பார்க் (Windsor Park, Dominica) கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணி மோதிக்கொள்ளும் போட்டி நடைபெறுகிறது..
போட்டியின் முதல் இன்னிங்சில் டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்த மேற்கிந்திய அணி, 64.3 ஓவரில் தனது 10 விக்கெட்டையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் திணறிப்போனார். PM Modi & French President Emmanuel Selfie: “பிரான்ஸ் – இந்திய நட்புறவு வாழ்க!” – பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மகிழ்ச்சி.!
மறுமுனையில் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நின்று ஆடி அணிக்கு ரன்களை வாரிக்குவித்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணியினர் 152.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்திருந்தனர். விராட் கோலி, ஜெய்ஷ்வால், சர்மா ஆகியோர் நின்று ஆடி அணிக்கு ரன்களை சேர்த்தனர்.
நேற்று இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 50.3 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தனர். அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார். ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இன்னிங்சில் பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால் டொமினிகாவின் வின்ட்சர் பார்க் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது. இதனால் இந்தியா அணி 1 புள்ளிகளை பெற்று முன்னிலையில் இருக்கிறது.