IND Vs NZ 1st Test: ரச்சின் ரவீந்திரா சதத்தால் நியூசிலாந்து 402 ரன்கள் குவிப்பு.. இந்தியா நிதான ஆட்டம்..!
இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட்களை இழந்து 231 ரன்கள் அடித்துள்ளது.
அக்டோபர் 18, பெங்களூரு (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி (IND Vs NZ 1st Test, Day 3) பெங்களுருவில் (Bengaluru) நேற்று முன்தினம் (அக்டோபர் 16) தொடங்கியது. கனமழையால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. இந்நிலையில், இரண்டாம் நாளில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்தது. Virat Kohli: 9 பந்துகளில் ரன்களே எடுக்காமல் ஆட்டமிழந்த விராட் கோலி; ரசிகர்கள் ஏமாற்றம்.. இந்தியா - நியூசிலாந்து போட்டியில் 8 ஆண்டுகள் பின் நடந்த மாற்றம்.!
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ரச்சின் ரவீந்திரா 22 ரன்களுடனும், டேரில் மிட்செல் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதில், 3 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 180 ரன்களை சேர்த்து 134 ரன்கள் முன்னிலை வகித்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், ஜடேஜா, அஸ்வின் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மூன்றாம் நாள் இன்று தொடங்கியது. இதில், ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி பின் அதிரடியாக ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) சதமடித்தார். மறுபுறம், டிம் சவுதி (Tim Southee) அதிரடியாக விளையாடி 65 ரன்களில் அவுட்டானார். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 91.3 ஓவர்களில் 402 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக கான்வே 91 ரன்கள், ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள் மற்றும் சவுதி 65 ரன்கள் அடித்தனர். இதன்மூலம், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியா சார்பில் குல்தீப் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிராஜ் 2 மற்றும் பும்ரா, அஸ்வின் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ரோஹித் சர்மா (Rohit Sharma) 52 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து விளையாடிய விராட் கோலி - சர்பராஸ் கான் 3-வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தனர். நாளின் கடைசி பந்தில் விராட் கோலி (Virat Kohli) 70 ரன்களில் அவுட் ஆனார். சர்பராஸ் கான் (Sarfaraz Khan) 70 ரன்களில் களத்தில் உள்ளார். இந்தியா 49 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 231 ரன்கள் குவித்துள்ளது. இன்னும், இந்திய அணி 125 ரன்கள் பின்தங்கியுள்ளது.
அஜாஸ் படேல் பந்தில் இறங்கி வந்து சிக்சர் அடித்த கோலி: