IND Vs NZ: களத்தை நேரில் வந்து சோதனையிட்ட ரோஹித் சர்மா, கெளதம் காம்பிர்.. இந்தியா - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயார்.!
இதனால் எதிர்வரும் இரண்டு டெஸ்ட் தொடர்களும் விறுவிறுப்பு பெற்றுள்ளன.
அக்டோபர் 23, புனே (Sports News): இந்தியா - நியூசிலாந்து (New Zealand India Tour) அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் 2024ன் (IND Vs NZ Test Series 2024) முதல் டெஸ்ட் போட்டி, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மிகுந்த பலப்பரீட்சை நடத்தியிருந்த நிலையில், இறுதியில் நியூசிலாந்து அணி வெற்றி அடைந்தது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்தான நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி சொற்ப ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து அதிர்ச்சி தந்தது. பின் மறுமுனையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி ரன்களை வாரிக்குவித்தது. இதனால் அந்த அணியின் வெற்றி உறுதியானது. இதன் வாயிலாக 36 ஆண்டுகள் கழித்து பெங்களூர் மண்ணில், 1988க்கு பின் நியூசிலாந்து அணி இந்திய அணியை தோல்வியுற செய்தது. IND Vs NZ: இந்திய அணிக்கு சாதகமாகுமா புனே மைதானம்?.. முந்தைய ஆண்டுகளில் நடந்தது என்ன?.. விபரம் இதோ.!
நேரில் களத்தை ஆய்வு செய்த கேப்டன், பயிற்சியாளர்:
அதனைத்தொடர்ந்து, இரண்டாவது இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் (IND Vs NZ Second Test Match 2024), மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திற்காக இரண்டு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். தீவிர பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். இதனிடையே, நேற்று செவ்வாய்க்கிழமை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma), தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிர் (Gautam Gambhir) ஆகியோர் ஆடுகளத்தை ஆய்வு செய்திருந்தனர். எதிர்வரும் இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் வெற்றியடைந்து, இந்தியா - நியூசிலாந்து (IND Vs NZ 2nd Test Match 2024) தொடரை இந்தியா கைப்பற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த ஒருபோட்டியில் தோல்வியை தழுவினாலும், இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியுற்றதாக கருதப்படும் என்பதால், வெற்றிக்கான உழைப்பு தொடருகிறது.
நேரலையில் கண்டு ரசியுங்கள்:
இரண்டாவது போட்டிக்கு சுழற்பந்துக்கு ஏற்ப ஆடுகளத்தை தயார் செய்யும் வகையில் இந்த ஆய்வு நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. சொந்த மண்ணில் முதல் இன்னிங்சில் 46 ரன்களில் வெளியேறிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் நின்று ஆடியது. எனினும், நியூசிலாந்து அணியின் வீரர்களும் சமஅளவுக்கு திறனை வெளிப்படுத்தி வெற்றியை அடைந்தனர். நாளை தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலி ஆகியவற்றில் நேரலையை கண்டுகளிக்கலாம்.