Archery World Cup: வில்வித்தை போட்டியில் அப்பறம்; இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளி வென்று அசத்தல்.!

வில்வித்தை போட்டியில் சீன வீராங்கனையிடம் 0-6 கணக்கில் தீபிகா குமாரி தோல்வியுற்றதால், இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பறிபோனது எனினும், வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

Archery World Cup 2024 (Photo Credit: @India_AllSports X)

அக்டோபர் 21, (Sports News): வில்வித்தை உலகக்கோப்பை (Archery World Cup 2024) இறுதிப்போட்டி 2024, மெக்சிகோ நாட்டில் உள்ள டைலாக்ஸ்கலா நகரில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் போட்டியில் கலந்துகொண்ட இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி (Deepika Kumari), வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். Indian Blind Cricket Team: பார்வையற்றோர் டி20 போட்டிகள்; இந்திய அணியில் இடம்பெற்ற தமிழர்..! 

தங்கப்பதக்கம் தவறியது: 

அவர் சீன வீராங்கனை லி ஜியாமனுக்கு எதிராக இறுதிப்போட்டியை களம்கண்ட நிலையில், 0-6 என்ற கணக்கில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டு வெள்ளிப்பதக்கத்தை அடைந்தார். இதன் வாயிலாக தீபிகா குமாரி தனது ஆறாவது பதக்கத்தை இந்தியாவுக்காக வாங்கிக்கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெள்ளிப்பதக்கம் வென்ற தீபிகா குமாரிக்கு குவியும் பாராட்டுக்கள்: