Mohammed Siraj: காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்; டிஎஸ்பி முகமது சிராஜுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!
கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரரான சிராஜ், இனி மக்களின் சேவைக்காக காவலராகவும் பணியாற்றுகிறார்.முறைப்படி அவர் டிஎஸ்பி ஆக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அக்டோபர் 13, ஹைதராபாத் (Sports News): இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராகவும், இந்தியர்களின் மனம் கவர்ந்த ஆட்டக்காரராகவும் இருப்பவர் முகமது சிராஜ் (Mohammed Siraj). இவர் தெலுங்கானா காவல்துறை இயக்குனர் ஜிதேந்தர் (டிஜிபி) முன்னிலையில், துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
குரூப் ஏ பணி:
கடந்த ஜூன் மாதம் இந்தியா - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி அடைந்தது. இதனையடுத்து, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் செயல்திறன் மற்றும் சாதனையை கௌரவிக்கும் வகையில், தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, சிராஜுக்கு குரூப் ஏ பிரிவு பணி வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
முறைப்படி பொறுப்பேற்றார்:
அதனைத்தொடர்ந்து, சிராஜுக்கு ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 600 சதுரம் மதிப்புள்ள வீடு ஒன்றையும் பரிசாக அரசு வழங்கி இருந்தது. சிராஜுக்கு குரூப் 1 பிரிவில் டிஎஸ்பி பொறுப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் நேற்று முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் முதல் வேப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் சிராஜ், நாட்டு நலப்பணியை மேற்கொள்ளும் வகையில் கவ்வாலி அதிகாரியாகவும் களமிறங்கி இருக்கிறார். Nobel Prize 2024: அமைதிக்கான நோபல் பரிசு.. வென்றது யார்? காரணம் என்ன?!
நியூசிலாந்து Vs இந்தியா (NZ Vs IND T20I 2024):
வரும் அக்.16ம் தேதி முதல் பெங்களூரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதில் சிராஜ் விளையாடுகிறார். 3 டி20 போட்டிகளில் முதல் போட்ட பெங்களூரிலும், இரண்டாவது போட்டி அக்.24 அன்று புனேவிலும், மூன்றாவது போட்டி நவம்பர் 1 அன்று மும்பையிலும் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா அணியை வழிநடத்துகிறார். துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார்.
மேலும் யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஷுப்மன் ஹில், கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரில், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் இடம்பெற்று இருக்கின்றனர்.
டிஎஸ்பி பதவியில் பொறுப்பேற்றுள்ள சிராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.